- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு… நேரில் வராத முன்னணி நடிகர்கள் - கடும் விமர்சனங்களுக்கு மத்தியில்...

தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் மறைவு… நேரில் வராத முன்னணி நடிகர்கள் – கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியான தகவல்கள்!

- Advertisement -

தமிழ் சினிமா துறையில் பல வெற்றிப் படங்களை தயாரித்தது ஏவிஎம் நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பாளர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஏவிஎம் சரவணன் நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86 என்ற நிலையில் மூப்பின் காரணமாக அவர் மறைந்தார். நடிகர்கள் ரஜினிகாந்த் சிவக்குமார் சூர்யா விஷால் பார்த்திபன் என பலரும் அவருக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.

ஆனால் ஏவிஎம் நிறுவனம் தயாரித்த பல படங்களில் நடித்த நடிகர் கமல்ஹாசன் நேரில் வரவில்லை. ஆனால் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது வருத்தத்தை கமல் தெரிவித்து இருந்தார். நேற்று அவர் டில்லியில் இருந்த நிலையில், விமானங்கள் போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் கமல்ஹாசனால் சென்னைக்கு வர முடியவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதே போல் நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கும் ஒரு சயன்டிபிக்சன் படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்காக இருவரும் சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்கு சென்றனர். அதன் காரணமாக சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி செலுத்த வரவில்லை என்று கூறப்படுகிறது.

நடிகர் அஜீத்குமார் மலேசியாவில் நடந்து வரும் கார் பந்தயத்தில் பிஸியாக இருப்பதாலும் அவரும் வரவில்லை. நடிகர் சியான் விக்ரம் மும்பையில் இருப்பதாலும் அவராலும் நேற்று சென்னைக்கு வர முடியவில்லை என்று இப்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் சென்னையில் இருந்த நடிகர் விஜய் வரவில்லை என்பது இப்போது பேசுபொருளாக மாறியிருக்கிறது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் குறித்த ஒரு முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது தயாரிப்பாளர்களை மதிப்பதில் அவர்களுக்கு மரியாதை தருவதில் இவர்கள் 2 பேருக்கு இணை யாருமில்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது ஏவிஎம் சரவணன் உடல் நலம் குன்றியிருந்த போது நடிகர் ரஜினிகாந்த் வாரம் ஒருமுறை அவரை வந்து பார்த்துவிட்டு மணிக்கணக்கில் பேசிவிட்டு செல்வது வழக்கம் என்கின்றனர்.

அதே போல் வாஹினி ஸ்டுடியோ தயாரிப்பாளர் நாகிரெட்டி உடல் நலமின்றி படுக்கையில் இருந்த போது நடிகர் ரஜினிகாந்த் வந்து அவரிடம் மணிக்கணக்கில் அமர்ந்து பேசிவிட்டு செல்வாராம். ரஜினி கமல் இருவருக்கும் குருநாதரான இயக்குனர் கே பாலசந்தர் நினைவு தவறிய நிலையில் படுக்கையில் இருந்த போது ரஜினி கமல் இருவருமே நேரில் வந்து கே பாலசந்தர் அருகில் அமர்ந்து மணிக்கணக்கில் அவரிடம் பழைய நினைவுகளை பேசி உற்சாகப்படுத்தும் வழக்கம் இருந்ததாகவும் இப்போது தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்