- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் பட நடிகர் தன்னைத் துன்புறுத்தியதாக பேசினாரா நித்யா மேனன்?... உண்மை நிலவரம் என்ன...

தமிழ் பட நடிகர் தன்னைத் துன்புறுத்தியதாக பேசினாரா நித்யா மேனன்?… உண்மை நிலவரம் என்ன…

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமின்றி கன்னடம், தெலுங்கு, மலையாள திரையுலகிலும் பரிட்சையமான நடிகையாக விளங்குபவர் நித்யா மேனன். பெங்களூரைச் சேர்ந்த இவர், நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் சிறு வயது முதலே சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தோன்றி வந்தார். பிறகு கன்னட திரைப்படங்களில் துணை நடிகையாக அவர் வலம் வர ஆரம்பித்தார்.

தொடர்ந்து கன்னடம் மலையாளம் மொழிகளில் மாறி மாறி நடித்து வந்த அவருக்கு, தெலுங்கில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. நானி நடிப்பில் ரொமான்டிக் காமெடியாக உருவான அல மோடலண்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பாராட்டைப் பெற்ற அவர், தெலுங்கில் உயரிய விருதான நந்தி விருதையும் பெற்றார்.

- Advertisement -

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த நித்யா மேனன், 180 திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். சித்தார்த் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சுமாரான விமர்சனத்தையே பெற, படத்தில் நடித்த நித்யா மேனன் யார் என்றே தமிழ் ரசிகர்களுக்கு தெரியாமல் போனது. பிறகு கௌதம் மேனன் தயாரிப்பில் வெப்பம் திரைப்படத்திலும் நித்யாமேனன் நடித்தார்.

அதில் இடம்பெற்ற மழை வரும் அறிகுறி பாடல் ஹிட் அடிக்க நித்யா மேனன் பரவலாக பேசப்பட்டார். நித்யா மேனனுக்கு தமிழில் நல்ல பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம் ஓகே கண்மணி தான். மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக, தாரா கதாபாத்திரத்தில் நடித்த அவர் இளைஞர்களின் நெஞ்சை கொள்ளை கொண்டார். அந்தப் படத்தில் தனது தனித்துவமான நடிப்பிற்காகவும் நித்யா மேனன் பாராட்டப்பட்டார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து தமிழ் திரையுலகில் நித்யா மேனனுக்கு அடுத்த திருப்புமுனையாக இருந்த திரைப்படம் மெர்சல். தந்தை வேடத்தில் நடித்த விஜய்க்கு துணைவியாக நடித்த அவர், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சமீபத்தில் தனுஷ் உடன் அவர் நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சோபனா கதாபாத்திரத்தில் நித்யா மேனன் வாழ, அவரைப் போன்ற பெண் தான் தங்களுக்கு மனைவியாக வேண்டும் என்று ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டதை பார்க்க முடிந்தது.

இந்த நிலையில் தெலுங்கு சினிமா படம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நித்யா மேனன், இங்குதான் எந்த ஒரு பிரச்சனையும் சந்தித்ததில்லை என்றும், தமிழ் சினிமா பட உலகம் அப்படி இல்லை எனவும் கூறியதாக தகவல் வெளியானது. மேலும் ஒரு படத்திற்கான சூட்டிங் போது தமிழ் பட ஹீரோவால் தான் துன்புறுத்தப்பட்டதாக நித்யா மேனன் தெரிவித்ததாக பேசப்பட்டது. இந்த தகவல் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்த, நடிகையிடம் சிலர் விசாரித்து உள்ளார்களாம். அப்போதுதான், அப்படி ஒரு தகவலையே நடிகை தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. இணையத்தில் யாரோ சிலர் பரப்பிய புரளியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

சற்று முன்