- Advertisement -
Homeபொழுதுபோக்குநா முத்துக்குமாரின் கவிதையை படமாக்க திட்டமிருக்கும் வெற்றிமாறன்... அதில் கதாநாயகராக அவர் யாரை தேர்வு செய்தார்...

நா முத்துக்குமாரின் கவிதையை படமாக்க திட்டமிருக்கும் வெற்றிமாறன்… அதில் கதாநாயகராக அவர் யாரை தேர்வு செய்தார் தெரியுமா… இயக்குனரே கூறிய தகவல்….

- Advertisement -

பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன், அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களைக் கொடுத்து அசத்தினார். ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என அவரது பயணம் வெற்றிகரமாகவே அமைந்தது. இதில் ஆடுகளம் மற்றும் அசுரன் திரைப்படத்திற்காக அவர் தேசிய விருதை வென்றார்.

அசுரன் திரைப்படத்தை முடித்த பிறகு வெற்றிமாறன் அடுத்ததாக, சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் டெஸ்ட் சூட்டிங் நடைபெற அதில் சூர்யாவும் பங்கேற்றார். பிறகு வெளிநாடுகளில் இதற்கான வி எப் எக்ஸ் பணிகள் நடைபெற்றன.

- Advertisement -

ஆனால் அடுத்தடுத்து ஒப்புக்கொண்ட திரைப்படங்களின் காரணமாக சூர்யா அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். வெற்றிமாறனும் இந்த இடைவெளியில் சிறிய திரைப்படம் எடுத்து வருவதாக கூறி விடுதலை படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள் மீது கவனத்தை திருப்பினார். இதில் அவருக்கு முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்தது.

ஆனால் இரண்டாம் பாகம் அந்த அளவு விமர்சனத்தை பெறவில்லை. சொல்லப்போனால் வெற்றிமாறனுக்கு இந்த திரைப்படம் முதல்முறையாக கலவையான விமர்சனத்தை கொடுத்தது என்று கூறலாம். இதன் பிறகு சூர்யாவுடன் அவர் இணைந்து வாடிவாசல் படத்தை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை, மீண்டும் இருவரும் தனது அடுத்தடுத்த பணிகளில் கவனம் செலுத்த போய்விட்டனர்.

- Advertisement -

இதில் வெற்றிமாறன் அடுத்ததாக சிம்புவுடன் இணைந்து பணியாற்ற இருப்பது உறுதியாகிவிட்டது. இதற்கான ப்ரோமோ வீடியோ சூட்டிங்கும் நடைபெற்றது. இந்த நிலையில் இயக்குனர் ராமுடன் நடைபெற்ற பேட்டி ஒன்றில் வெற்றிமாறன் பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதில் சிம்புவுடன் படம் தொடர்பான அறிவிப்பு வீடியோதான் இப்போது வரும் என்றும், டைட்டில் வீடியோ அதன் பிறகு வெளியாகும் எனவும் கூறினார்.

அப்போது ராம், நா முத்துக்குமார் கவிதையை படமாக எடுக்க திட்டமிட்டிருந்தீர்களே எனக் கேட்டபோது அதற்கும் வெற்றிமாறன் பதில் அளித்தார். அதில், சூரியுடன் இது குறித்து பலமுறை பேசியிருக்கிறோம் என்று தெரிவித்தார். சூரி தற்போது பெரிய பெரிய படங்களில் நடிக்க திட்டமிட்டு இருப்பதால், நீங்கள் வேறு ஒரு ஹீரோவை கூட வைத்து எடுக்கலாம் என ராம் நகைச்சுவையாக தெரிவித்தார். இதனிடையே கவிஞர் நா முத்துக்குமாரின் கவிதையை வெற்றிமாறன் படமாக்க திட்டமிட்டு இருந்த சம்பவம் நா முத்துக்குமார் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்