- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங்கில் கேப்டன் விஜயகாந்தை நடிக்க விடாமல் பொங்கல் சாப்பிட வைத்து தூங்க வைத்து விடுவேன் -...

ஷூட்டிங்கில் கேப்டன் விஜயகாந்தை நடிக்க விடாமல் பொங்கல் சாப்பிட வைத்து தூங்க வைத்து விடுவேன் – பிரபல இயக்குனர் சொன்ன ஆச்சரிய தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர் ஆர்வி உதயகுமார். குறிப்பாக அவரது இயக்கத்தில் வெளியான உரிமை கீதம் எஜமான் சின்னக்கவுண்டர் பொன்னுமணி ராஜகுமாரன் என பல படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன.

குறிப்பாக ஆர்வி உதயகுமார் இயக்கிய படங்களில் விஜயகாந்த் சுகன்யா கவுண்டமணி செந்தில் மனோரமா வடிவேலு உள்ளிட்டோர் நடித்த சின்னக்கவுண்டர் படம் மாபெரும் வெற்றிப் படமாக இருந்தது. விஜயகாந்த் நடித்த கிராமத்து படங்களில் சின்னக்கவுண்டர் படம் எப்போதுமே முதலிடத்தில் இருக்கிறது. இளையராஜா இசையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன.

- Advertisement -

சமீபத்தில் சின்னக் கவுண்டர் படம் குறித்து பேசிய இயக்குனர் ஆர் வி உதயகுமார் கூறியதாவது, வேறொரு படப்பிடிப்பில் இரவு முழுவதும் மெஷின் கன் துப்பாக்கிகளை பிடித்து சண்டை காட்சியில் நடித்துவிட்டு அதிகாலை 7 மணிக்கு பொள்ளாச்சிக்கு சின்னக்கவுண்டர் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள விஜயகாந்த் வந்து விடுவார்.

வந்த உடனே என்னிடம், என்னென்ன காட்சி இப்ப எடுக்கணும். சீக்கிரமா எடுத்திடுங்க என்பார். அவரை பார்த்தால் இரவு முழுவதும் தூங்காமல் கண்கள் ரொம்பவும் சிவப்பாக இருக்கும். இந்த படத்தில் அவரது கேரக்டருக்கு யாரையும் முறைத்து பார்க்க கூடாது. குறிப்பாக கண்கள் சிவப்பாக இருக்கக் கூடாது.

- Advertisement -

அதனால் அவரை முதலில் சாப்பிடுங்க, என்று காலையில் பொங்கல் சாப்பிட வைத்து விடுவேன். பிறகு போய் தூங்கி எந்திரிச்சு வாங்க என்று சொல்லிடுவேன். அங்க இருக்கிற தென்னந்தோப்புல மரத்துக்கு கீழே தென்னங்கீத்தை போட்டு அது மேலே படுத்து கேப்டன் தூங்கிடுவார்.

அப்புறம் 11 மணிக்கு மேல எழுந்து வருவார். பார்த்தால் கண்கள் வெள்ளையாக இருக்கும். ஷூட்டிங் வந்தா இப்படி பொங்கலை சாப்பிட வெச்சு என்னை தூங்க வெச்சுட்டீங்களே என்று குழந்தை மாதிரி என்னிடம் கோபித்துக் கொள்வார். அவரது கண்கள் சிவப்பாக இருந்தால் அப்படி அவரை சில நேரம் தூங்க வைத்து சின்னக்கவுண்டர் படத்தை எடுத்து முடித்தேன் என்று ஆர்வி உதயகுமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்