- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்யின் மேல் உள்ள கோபத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பரை  பழி வாங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்? அடக்கொடுமையே

விஜய்யின் மேல் உள்ள கோபத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பரை  பழி வாங்கிய எஸ்.ஏ.சந்திரசேகர்? அடக்கொடுமையே

- Advertisement -

விஜய் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் இருந்தே தான் சினிமாவில் ஹீரோவாக ஆகவேண்டும் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சியை வற்புறுத்திக்கொண்டே இருந்தாராம். ஆனால் எஸ்.ஏ.சிக்கு விஜய்யை ஹீரோவாக ஆக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லையாம்.

எனினும் தனது மகனின் ஆசைக்கு ஏற்ப, விஜய்யை “நாளைய தீர்ப்பு” திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். அதன் பின் விஜய்யை வைத்து பல திரைப்படங்களை தயாரித்தது மட்டுமல்லாது விஜய்யின் கெரியரை செதுக்கியதில் முக்கிய பங்காற்றினார் அவர்.

- Advertisement -

எனினும் சமீப காலமாக விஜய்யும் அவரது தந்தையான எஸ்.ஏ.சிக்கும் இடையே ஒரு சிறு விரிசல் விழுந்திருப்பது கண்கூடாகவே தெரிய வருகிறது. சில  மாதங்களுக்கு முன்பு ஒரு சினிமா நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஏ.சி, “மற்ற குடும்பங்களில் எப்படி தந்தைக்கும்  மகனுக்கும் இடையே பிரச்சனை இருக்கிறதோ அதே போல்தான் எனக்கும் விஜய்க்கும் இருக்கிறது” என வெளிப்படையாகவே கூறினார்.

இந்த நிலையில் எஸ்.ஏ.சி. தற்போது விஜய் தொலைக்காட்சியில் “கிழக்கு வாசல்” என்ற தொடரில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் வெங்கட் ரங்கநாதன் என்பவர் நடித்து வருகிறார்.

- Advertisement -

முதலில் இந்த சண்முகம் கதாபாத்திரத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ்தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் எஸ்.ஏ.சியோ இந்த சீரியலின் தயாரிப்பாளரான ராதிகா சரத்குமாரிடம் கூறி சஞ்சீவை நீக்கிவிட்டாராம். அதன் பிறகுதான் வெங்கட் ரங்கநாதனை ஒப்பந்தம் செய்தார்களாம். இவ்வாறு மகனின் மேல் உள்ள கோபத்தில் விஜய்யின் நண்பரான சஞ்சீவை எஸ்.ஏ.சி பழிவாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்