- Advertisement -
Homeபொழுதுபோக்குகுக் வித் கோமாளியில் மீண்டும் இணைந்த மணிமேகலை, வெளியான புரொமோ வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்

குக் வித் கோமாளியில் மீண்டும் இணைந்த மணிமேகலை, வெளியான புரொமோ வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான “குக் வித் கோமாளி” தற்போது நான்காவது சீசன் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மிகவும் ஜாலியாகவும் அதே நேரத்தில் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளாது.

சீசன் 1-ல் இருந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த சீசனில் குக் ஆக அவதாரம் எடுத்துள்ளார். மிகவும் சிறப்பான குக் ஆகவும் திகழ்ந்து வரும் சிவாங்கி தற்போது டாப் 5க்குள் நுழைந்துள்ளார். எனினும் முதல் சீசனில் இருந்து ரசிகர்களை மகிழ்வித்த கோமாளியான பாலா, இந்த சீசனில் பங்குகொள்ளவில்லை. அதே போல் மணிமேகலை, இந்த சீசனின் தொடக்கத்தில் சில வாரங்களே மட்டும் வந்தார். அதன் பின் அவரும் இந்த சீசனில் இருந்து வெளியேறினார். இதனால் ரசிகர்கள் மிகவும் கவலைக்குள்ளானார்கள்.

எனினும் ஜிபி முத்து, மோனிஷா, புகழ், சுனிதா, குரைசி, ரவீனா ஆகியோர் இந்த சீசனில் கோமாளிகளாக கலக்கி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் இந்த வாரத்திற்கான புரொமோ வீடியோ ஒன்று வெளியானது. அதில் மணிமேகலை திடீரென என்ட்ரி கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “மணிமேகலை ரிட்டர்ன்ஸ்” போன்ற கம்மெண்ட்டுகளை இட்டு வருகின்றனர்.

“குக் வித் கோமாளி” சீசன் 4  நிகழ்ச்சியில் சில வாரங்கள் மட்டுமே பங்கேற்று வெளியேறிய மணிமேலை தனது கணவர் ஹுசைனுடன் இணைந்து அவரது சொந்த கிராமத்தில் HM Farm House என்ற பண்ணையை தொடங்கினார். அதற்கான பணிகளில் மிகவும் மும்முரமாக இருந்த நிலையில் தற்போது மீண்டும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் இணைந்தது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சற்று முன்