- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரண்டு கோடி ரூபாய் சம்பளம் என்று கூறியும் அந்தப் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி...

இரண்டு கோடி ரூபாய் சம்பளம் என்று கூறியும் அந்தப் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி – அதற்கு இப்படி ஒரு காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக, முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். சாய் பல்லவி குறிப்பாக பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சர் ஆக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர். பிரேமம் படத்தை தொடர்ந்து சாய் பல்லவி அடுத்து, தமிழில் மாரி 2 என்ற படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்திருந்தார். அதன் பிறகு கார்கி என்ற படத்தில் சாய் பல்லவி நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

தொடர்ந்து செல்வராகவன் சூர்யா நடித்த என் ஜி கே என்ற படத்திலும் சூர்யாவுக்கு மனைவியாக சாய்பல்லவி நடிப்பு பாராட்டை பெற்றது. இப்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவி, அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அது தவிர இந்தி படம் ஒன்றிலும் அவர் சீதையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சாய் பல்லவி ஒரு டாக்டராக இருந்தும், மருத்துவ சேவையை காட்டிலும் கலைச்சேவை அவரை அதிகமாக ஈர்த்ததால் சினிமாவுக்கு நடிக்க வந்துவிட்டார். எனினும் தற்போது அவர் கோவையில் ஒரு அதிநவீன வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறார். அந்த மருத்துவமனையில் ஏகப்பட்ட சலுகைகளுடன் ஏழை மக்களுக்கு அவர் சிகிச்சை அளிக்கவும் சில திட்டங்கள் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க முன்வந்தும், ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று சாய்பல்லவி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா பிரபலங்கள் தொடர்ந்து விளம்பர படங்களில் நடித்து ஏகப்பட்ட வருமானம் பார்க்கின்றனர். ஒரு நிமிடம் வரக்கூடிய அல்லது 30 வினாடிகள் மட்டுமே வரக்கூடிய விளம்பரங்களில் நடித்து பல கோடிகளை வருமானமாக பெற்று வருகின்றனர்.

குறிப்பாக பாலிவுட் பிரபல நடிகர்கள் போதை தரும் பொருட்கள் குறித்த விளம்பரங்களில் கூட நடித்து பெரிய அளவில் வருமானம் ஈட்டுகின்றனர். சினிமாவில் நடிப்பதை காட்டிலும், விளம்பர படங்களில் அடிக்கடி நடிப்பது அவர்களுக்கு பெரிய கணிசமான வருமானத்தை அள்ளித் தருகிறது.நடிகை சாய் பல்லவியிடம் அழகு சாதன நிறுவனம் ஒன்று தங்களுடைய நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்குமாறும், அதற்காக சம்பளம் 2 கோடி ரூபாய் தருவதாக பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது ஆனால் அந்த விளம்பர படத்தில் நடிக்க முடியாது என்று சாய்பல்லவி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.

சாய்பல்லவி அடிப்படையில் ஒரு டாக்டர் என்பதால் அவர் மேக்கப் பொருட்களை விரும்புவதில்லை. சினிமாவிலும் கூட அவர் மிகவும் அவசியப்பட்டால் மட்டுமே லேசான மேக்கப் செய்வார். அழகு சாதன பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து ஒரு டாக்டராக அவர் தெரிந்து வைத்திருப்பதால் தன்னால் இந்த விளம்பரப் படத்தில் நடிக்க முடியாது என்று மறுத்திருக்கிறார். பணம் கிடைத்தால் போதும் எப்படிப்பட்ட விளம்பரத்திலும் நடிக்க தயார் என்று கூறும் நடிகர் நடிகைகளுக்கு மத்தியில் 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க முன்வந்தும், விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என்று மறுத்த சாய்பல்லவியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்