தமிழ் சினிமா இயக்குனர்களில் மிகவும் கவனிக்கப்படும் முக்கிய படைப்பாளியாக இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன். அவர் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன், விடுதலை போன்ற படங்கள், அவரது பெயரை சொல்லும் வேற லெவல் படங்களாக அமைந்து விட்டன.
இதற்கிடையே காமெடி நடிகர் சூரியை கதாநாயகனாக வைத்து அவர் இயக்கிய படம் விடுதலை. அந்த படம் வெளியாகி ஆண்டுகள் கடந்தும் விடுதலை 2 இன்னும் படப்பிடிப்பு முடியாமல் தொடர்கிறது. இந்த படத்தில் நடித்த சூரி அடுத்து கருடன், கொட்டுக்களி என்ற 2 படங்களில் நடித்து முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது செப்டம்பர் மாதம் வாடிவாசல் படப்பிடிப்பை துவக்க, இயக்குனர் வெற்றிமாறன் முடிவு செய்திருப்பதாகவும், அதில் சூர்யாவும், அமீரும் இணைந்து நடிப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகி ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது. ஏனென்றால் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பைபல மாதங்களாக துவங்காமல் தாமதம் செய்து வருகிறார் வெற்றிமாறன்.
சமீபகாலமாக தென்மாவட்டங்களில் தென்காசி அதிகளவில் படப்பிடிப்பு நடத்தப்படும் சினிமா நகரமாக மாறி வருகிறது. பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், கொடைக்கானல், ஊட்டியை போல, தென்காசியில் தொடர்ந்து ஷூட்டிங் நடக்கிறது. சிங்கம், தாமிரபரணி, ரத்னம், வேட்டையன் படங்களை தொடர்ந்து இப்போது, விடுதலை 2 படப்பிடிப்பும் அங்கு நடக்கிறது.
தற்போது பரபரப்பாக தென்காசியில் விடுதலை 2 படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில், 3 நாட்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீர் லீவ் விட்டிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். அதாவது 3 நாட்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள், யூனிட் ஆட்கள் எல்லோருமே இருப்பார்கள். ஆனால் ஷூட்டிங் மட்டும் நடக்காது.
இப்படி 3 நாட்கள் திடீர் லீவ் விட்ட வெற்றிமாறன், படத்தின் ஸ்கிரிப்டில் மாற்றங்களை, திருத்தங்களை செய்திருக்கிறார். அதற்காக தான் இப்படி 3 நாட்கள் திடீர் லீவ் விட்டிருக்கிறார். இதை பார்த்து அதிருப்தியடைந்த படக்குழுவினர், டைரக்டர் மிஷ்கின் ஷூட்டிங் ஸ்பாட்டில் புத்தகங்களை வாசித்துக்கொண்டு ஷூட்டிங்கை நடத்தாமல் அமர்ந்து விடுவார். அதேபோல் இன்னொரு மிஷ்கினாக வெற்றி மாறனும் மாறி வருகிறாரே என, புலம்பி வருகின்றனர்.





