- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் வேலை பார்க்காமல் போனதற்கு இதுதான் காரணம்... விஜயின் ரசிகரும், இயக்குனர் லோகேஷின் நண்பருமான...

கூலி படத்தில் வேலை பார்க்காமல் போனதற்கு இதுதான் காரணம்… விஜயின் ரசிகரும், இயக்குனர் லோகேஷின் நண்பருமான ரத்னகுமார் உடைத்த உண்மை…

- Advertisement -

ரத்தினகுமாரின் இயக்கத்தில் முதலாவதாக வெளிவந்த திரைப்படம் மேயாத மான். கதாநாயகனாக வைபவ் நடிக்க, பிரியா பவானி சங்கர் இதில் அறிமுகமானார். காதலை வித்தியாசமான பாணியில் நகைச்சுவை கலந்து இந்த திரைப்படத்தை கொடுத்திருந்தார் ரத்தினகுமார்.

 

- Advertisement -

விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் கொண்டாடப்பட்டாலும் வசூல் ரீதியாக மேயாத மான் வெற்றி அடையவில்லை. இருப்பினும் தற்போது வரை அந்த திரைப்படத்தைப் பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, ஆடை மற்றும் குளுகுளு ஆகிய திரைப்படங்களை அவர் இயக்கினார்

 

- Advertisement -

ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களுமே படு தோல்வியை சந்தித்தன. இது ஒரு பக்கம் இருக்க அவர் தனது நண்பர் லோகேஷ் கனகராஜ் படத்தில் இணை இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறார். கடந்த காலங்களில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்களில் திரைக்கதை அமைப்பதில் முக்கிய பங்காற்றி வந்தவர் தான் ரத்தினகுமார்.

 

இறுதியாக லியோ திரைப்படத்தில் அவர், வசனகர்த்தாவாகவும், திரைக்கதை அமைப்பதிலும் முக்கிய பங்காற்றினார். இதனைத் தொடர்ந்து அந்த திரைப்படத்தின் வெற்றி விழாவில், பங்கேற்ற ரத்தினகுமார் விஜயை புகழ்ந்து பேசினார். அப்போது கழுகு காக்கா கதையையும் அவர் ஞாபகப்படுத்தினார். இதற்கு முன்பாக ரஜினி ஒரு நிகழ்ச்சியில் பேசும் பொழுது இந்த கதையை வேறொரு விதத்தில் கூறியிருப்பார்.

 

அது விஜயைத் தான் குறிப்பிட்டு பேசினார் என்று பலரும் கூறி வந்தார்கள். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ரத்னகுமார் பேசியதாக இணையத்தில் பரப்பப்பட்டது. இப்படியான சூழலில் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினியை வைத்து கூலி திரைப்படத்தை இயக்க அதில் ரத்தினகுமார் இடம்பெறவில்லை. இது சர்ச்சையான சூழலில் தற்போது அதற்கு விளக்கம் அளித்து இருக்கிறார் இயக்குனர்.

 

இது தொடர்பாக அவர் அளித்திருக்கும் பேட்டியில், எனது நண்பர் லோகேஷ் கனகராஜ் கதையில் ஒரு படத்தை இயக்க இருந்தேன். அதே சமயத்தில் கூலி படத்திற்கு வேலைகளும் நடைபெற இருந்ததால் ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளையும் பார்க்க முடியாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது பிரேமலு பட ஸ்டைலில் ரொமான்டிக் படம் எடுக்க திட்டமிட்டு இருக்கிறேன். தற்போது வரை லோகேஷ் உடன் கதை தொடர்பான ஆலோசனையில் நான் பங்கேற்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்