- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் கணவரை நான் பிரிவதற்கு இதுதான் காரணம், ஏஆர் ரகுமான் ஒரு அற்புதமான மனிதர்; அவர்...

என் கணவரை நான் பிரிவதற்கு இதுதான் காரணம், ஏஆர் ரகுமான் ஒரு அற்புதமான மனிதர்; அவர் மீது களங்கம் சுமத்தாதீர்கள் – வேண்டுகோள் விடுத்த சாயிரா பானு !

- Advertisement -

சில தினங்களுக்கு முன் ஏஆர் ரகுமான் மனைவி சாயிரா பானு தன் கணவரை பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டார். இது தமிழ் சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நாளில் ஏஆர் ரகுமானின் இசைக்குழுவில் உள்ள கிடார் இசை பெண் கலைஞர் மோனிகா டே என்பவரும் தன் கணவர் மார்க்கை பிரிவதாக அறிவித்தார். அதனால் ஏஆர் ரகுமானுக்கும் மோனிகா டேவிற்கும் உள்ள நெருக்கம் காரணமாகவே சாயிரா பானு தன் கணவர் ஏஆர் ரகுமானை பிரிந்து விட்டதாக வதந்தி பரவியது.

இந்நிலையில் ஏஆர் ரகுமானை பிரிந்தது குறித்து சாயிரா பானு முதல் முறையாக விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து சாயிரா பானு பேசிய ஆடியோ பதிவு ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த குரல் பதிவில் சாயிரா பானு கூறியிருப்பதாவது, நான் சாய்ரா ரகுமான் பேசுகிறேன். நான் தற்போது மும்பையில் இருக்கிறேன்.

- Advertisement -

கடந்த 2 மாதங்களாக எனக்கு உடல் நலம் சரியில்லை. அதனால்தான் என் கணவர் ஏஆர் ரகுமானிடம் இருந்து விலகி இருக்க விரும்பினேன். ஆனால் யூடியூப் மற்றும் ஊடகங்களில் தயவுசெய்து அவருக்கு எதிரான தவறாக எதுவும் சொல்ல வேண்டாம். அவர் அருமையான நபர். உலகின் தலைசிறந்த மனிதர். என் உடல் நலப் பிரச்னை காரணமாக நான் சென்னையை விட்டு வெளியேற வேண்டி இருந்தது. தற்போது மும்பையில் சிகிச்சை பெற்று வருகிறேன்.

சென்னையில் ஏஆர் ரகுமானின் பிஸியான வேலைகளுக்கு நடுவே இது சாத்தியமாகி இருக்காது. நான் அவரையோ எனது குழந்தைகளையோ தொந்தரவு செய்ய விரும்பவில்லை. ஏஆர் ரகுமான் ஒரு அற்புதமான மனிதர். அவர் எப்படி இருக்கிறாரோ, அப்படியே இருக்க விடுங்கள் என்று நான் வேண்டிக்கொள்கிறேன்.

- Advertisement -

அவருக்கு எதிலும் தொடர்பு இல்லை. நான் என் உயிருக்கும் மேலாக அவரை நம்புகிறேன். அந்த அளவிற்கு நான் அவரை நேசிக்கிறேன். அவரும் அவ்வாறே என்னை நேசிக்கிறார். எனவே அவர் மீதான அனைத்து பொய்யான குற்றச்சாட்டுகளையும் நிறுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். இந்த நேரத்தில் எங்கள் தனிமைக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.

இதுவரை எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. நான் விரைவில் சென்னைக்கு வருவேன். ஆனால் நான் என் சிகிச்சையை நிறைவு செய்ய வேண்டும். எனவே ஏ ஆர் ரகுமானின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் கீழ்த்தரமான செயலை தயவு செய்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் நான் சொன்னது போல் அவர் ஒரு மிகச் சிறந்த நபர் என்று சாயிரா பானு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்