- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகைக்கு படப்பிடிப்பில் காயம்... ரசிகர்கள் அதிர்ச்சி... நடந்தது என்ன...

பிரபல நடிகைக்கு படப்பிடிப்பில் காயம்… ரசிகர்கள் அதிர்ச்சி… நடந்தது என்ன…

- Advertisement -

வெள்ளித்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து பின்னர், கதாநாயகியாக அந்தஸ்து பெற்றவர் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் இறுதிக்காட்சியில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதனைத் தொடர்ந்து, தமிழில் நான் ஈ திரைப்படத்தின் மூலம் அவர் கதாநாயகியாக அந்தஸ்து பெற்றார்.

 

- Advertisement -

அந்தத் திரைப்படம் சமந்தா எதிர்பார்த்தது போலவே மிகப்பெரிய ஹிட் அடித்தது. தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நீதானே என் பொன் வசந்தம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார் சமந்தா.

 

- Advertisement -

இதன் பிறகு அவரின் மார்க்கெட் எகிறியது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் சமந்தா முக்கிய நடிகையாக மாறினார். அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களுடன் அவர் ஜோடி சேர்ந்தார். தெறி திரைப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.

 

இந்தக் கூட்டணி மெர்சல் திரைப்படத்திலும் தொடர்ந்தது. தனது அழகான தோற்றம், வசீகரிக்கும் உச்சரிப்பு என அத்தனையிலும் சமந்தா கலந்து கட்டி அடித்ததால் அவரை பலரும் கொண்டாடினார்கள். இந்த நிலையில் தெலுங்கின் முன்னணி நட்சத்திரமான நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

இவர்களது திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் தனது நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார் சமந்தா. அவர் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்னும் ஐட்டம் சாங்கில் ஆடி இருந்தார். இதில் படு கவர்ச்சி காட்டிய சமந்தா, அதிகமாக வைரலானார். இதன் காரணமாகவே நாக சைதன்யாவுக்கும் அவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

இருவரும் விவாகரத்து பெற்ற நிலையில், தொடர்ந்து திரைப்படங்களில் சமந்தா கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அவர் மயோசிடைஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து தற்போது மீண்டு வந்திருக்கும் சமந்தா, வருண் தவான் உடன் இணைந்து ஒரு வெப் தொடரில் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவருக்கு படப்பிடிப்பின் போது மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

 

- Advertisement -

சற்று முன்