- Advertisement -
Homeபொழுதுபோக்குஞானவேல் ராஜா சொல்வது உண்மையல்ல, இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது நடந்தது இதுதான்- ஓபன் ஸ்டேட்மென்ட்...

ஞானவேல் ராஜா சொல்வது உண்மையல்ல, இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது நடந்தது இதுதான்- ஓபன் ஸ்டேட்மென்ட் கொடுத்த இயக்குநர், நடிகர் சசிக்குமார்

- Advertisement -

அமீர் இயக்கத்தில் வெளிவர உள்ள மாயவலை படத்தின் பிரமோவின் போது, ஜப்பான் பட விழாவுக்கு கார்த்தி ஏன் உங்களை அழைக்கவில்லை என கேள்வி எழுந்தது. அதற்கு பருத்திவீரன் படம் தயாரிப்பு குறித்த வழக்கு 17 ஆண்டுகளாக நடந்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், நான் எப்படி அதில் கலந்துக்கொள்ள முடியும் என கூறியிருந்தார் இயக்குநர் அமீர்.

இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பதிலளித்த தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, படம் தயாரிக்க கொடுத்த பணத்தை எல்லாம் அமீர் ஏமாற்றி விட்டார். தயாரிப்பு செலவுகளில் நிறைய பொய் கணக்குகளை காட்டினார் என, அமீர் குறித்து மிக தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

- Advertisement -

இதற்கு பதில் கேட்டு சமூகவலைதள ஊடகங்கள் தொடர்ந்து அமீரை வலியுறுத்திய நிலையில், அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டு அதில், கோர்ட்டில் வழக்கு நடப்பதால்தான், அமைதியாக இருக்கிறேன். நான் உண்மைகளை பேச ஆரம்பித்தால், பலரது வாழ்வில் புயலை கிளப்பும் என்றும் அந்த அறிக்கையில் எச்சரித்து இருந்தார்.

அந்த அறிக்கையில், பருத்திவீரன் படப்பிடிப்பு நடந்த போது நடந்த உண்மைகள் அனைத்தும் அங்கு இருந்த படக்குழுவினருக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் தெரியும். ஆனால், அவர்களும் இந்த விமர்சனங்களை வேடிக்கை பார்க்கிறார்களே, என்று வருத்தமும் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

அமீர் இயக்கிய பருத்திவீரன் படப்பிடிப்பின் போது சமுத்திரக்கனி, சசிக்குமார் ஆகியோர் அமீருடன் இருந்தனர்., அமீரின் நெருங்கிய நண்பர் சசிக்குமார் என்ற நிலையில், இந்த படப்பிடிப்பின் போதுதான் சமுத்திரக்கனியும், சசிக்குமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆகி இருக்கின்றனர். அதன்பின்பு, சமுத்திரக்கனியை வைத்து சசிக்குமார் சுப்ரமணியபுரம் படத்தையும், சசிக்குமாரை வைத்து சமுத்திரக்கனி நாடோடிகள் படத்தையும் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள சசிக்குமார், அமீர் குறித்து ஞானவேல் ராஜாவின் கருத்துகளை வன்மையாக கண்டிக்கிறேன். பருத்திவீரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக, முழு தொகையையும் நானே அமீருக்கு கடனாக கொடுத்தேன். எங்களுக்கான பணத்தை செட்டில் செய்யாமல்தான், படம் ரிலீஸ் செய்யப்பட்டது. அமீர் சொல்வதுதான் முற்றிலும் உண்மை, என தெரிவித்துள்ளார் சசிக்குமார்.

- Advertisement -

சற்று முன்