பிக்பாஸ் வீட்டுக்குள் வரும் போட்டியாளர்களில் பலரும் தங்களது சுயரூபங்களை ஒரு கட்டத்தில் வெளிப்படுத்தி விடுகின்றனர். என்னதான் சுற்றிலும் கேமராக்கள் உள்ளன என்று அடக்கி அடக்கி வாசித்தாலும் ஒரு கட்டத்தில் பூகம்பமாக தங்களது உணர்ச்சிகளை கொட்டி விடுகின்றனர். அது இயல்பாக உண்மையாக இருக்கும் போது பார்வையாளர்கள் அதை மதிக்கின்றனர். அந்த ரியாலிடி ஷோவின் வெற்றியும் அதுதான்.
ஆனால் ஒரு சிலர் 100 நாட்களும் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல டபாய்த்துக்கொண்டே காலம் தள்ளி விடுகின்றனர். அவர்கள் டாஸ்க்கும் விளையாட மாட்டார்கள். மற்றவர்களுடன் சண்டையிடவும் மாட்டார்கள். எப்படியோ பிக்பாஸ் வீட்டுக்குள் நாட்களை கழித்து விடுவார்கள்.
அப்படி தான் முன்னாள் போட்டியாளர்கள் ராஜூ ரித்விகா போன்றவர்கள் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்கள். இந்த சீசனின் கனி போன்ற சிலர் வீட்டுக்குள் சும்மாவே இருந்து பல வாரங்களை கடந்து விட்டார்கள் என்பதும் பிக்பாஸ் பார்வையாளர்களின் குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. இப்போது பிக்பாஸ் இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையில் இன்னும் 1 வாரம்தான் உள்ளது.
இந்த சூழலில் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போகிற கடைசி போட்டியாளர் சாண்ட்ரா என்பது உறுதியாகி உள்ளது. அவர்தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்ப போகிறார். நடிப்பு அரக்கி டிராமான குயின் என்று விமர்சிக்கப்பட்ட அவர் இந்த வாரம் எவிக்சன் ஆகி வெளியேறும் நிலையில், புத்திசாலித்தனமாக பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போயிக்கலாம் என்றும் பலர் கூறுகின்றனர்.
அதே நேரத்தில் கம்ருதீன் பார்வதி விவகாரத்தில் டிராமா போட்டு பெரிய அளவில் நடித்தவர் சாண்ட்ரா என்றும் பலர் விமர்சனம் செய்த நிலையில் வீட்டுக்குள் மீண்டும் வந்த ரம்யா ஜோவும் எதுக்கு இப்படி நடிக்கறீங்க என்று நேரடியாக கேட்டது மட்டுமின்றி மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியிலும் சாண்ட்ரா பற்றிய இதே விமர்சனத்தை முன்வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக பிக்பாஸ் பழைய போட்டியாளர்கள் வீட்டுக்குள் வரும் நிலையில் சாண்ட்ரா தனது கணவர் பிரஜினும் வர இருப்பதால் காத்திருந்தார். அதனால் தான் அவர் பணப்பெட்டியுடன் வெளியே செல்லவில்லை என்றும் கூறியிருந்தாா். ஆனால் பிரஜின் வீட்டுக்குள் வரும் முன்பே சாண்ட்ரா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நிலையில் இதுகுறித்து பலரும் ட்ரோல் செய்து சாண்ட்ராவை கலாய்த்து வருகின்றனர்.





