நடிகர் விஜய் சினிமாவில் பல தடைகளை இடையூறுகளை தோல்விகளை கடந்து தனது கடின உழைப்பால் உச்சம் தொட்டார் என்றால் அது மிகையல்ல. ஆரம்பத்தில் உருவக்கேலி செய்யப்பட்ட நடிகர் விஜய் ஒரு காலகட்டத்துக்கு பிறகு விஜய் படம் என்றாலே வெற்றிதான் என்கிற அளவுக்கு மாஸ் நடிகராக மாறி கெத்து காட்டினா்ர.
ஒரு படத்தில் நடிக்க ரூ. 250 கோடி சம்பளம் வாங்கும் முதல் தமிழ் நடிகராக விஜய் உயர்ந்த நிலையில் அவர் அரசியல் களத்தில் குதித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய விஜய்க்கு 2 ஆண்டுகளாக மக்கள் தந்து வரும் ஆதரவும் வரவேற்பும் வருகிற தேர்தலில் அத்தனையும் ஓட்டுக்களாக மாறும் என்று நம்பப்படுகிறது.
ஆனால் தமிழ்நாடே கொண்டாடும் நடிகர் விஜயை அவரது குடும்பம் வெறுத்த நிலையில் அவரது மனைவி சங்கீதா கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்திருக்கிறார். மேலும் நடிகை திரிஷாவுடன் பல ஆண்டுகளாக நடிகர் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
அது நிஜம்தான் என நிரூபிக்கும் விதமாக நடிகர் விஜயும் ஒரு திருமண விழாவில் நடிகை திரிஷாவுடன் ஒரே காரில் ஒரே நிற உடையில் வந்து பங்கேற்று மேலும் பரபரப்பை அதிகரிக்க செய்தனர். அரசியல் களத்தில் எதிர்கட்சிகளுடன் மோதல், குடும்ப வாழ்க்கையில் சிக்கல் என விஜய் இரண்டு தரப்பு பிரச்னைகளையும் ஒரே நேரத்தில் எதிர்கொண்டு வருகிறார்.
இதற்கிடையே வருகிற 20ம் தேதி செங்கல்பட்டு கோர்ட்டில் சங்கீதா தரப்பில் தொடரப்பட்ட விவாகரத்து வழக்கில் விஜய் நேரில் ஆஜராக வேண்டும். அங்கு நீதிபதி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணையில் விஜய் தனது தரப்பு நியாயங்களை எடுத்துக்கூற வேண்டும். இந்த சூழலில் விஜய்க்கு எதிராக சங்கீதா தொடர்ந்து பிரச்னைகளை உருவாக்க தயாராகி விட்டார்.
வருகிற 21ம் தேதி விஜய் மனைவி சங்கீதா பிரஸ்மீட் நடத்தி செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது விஜய் குறித்த இன்னும் பல குற்றச்சாட்டுகளையும் புகைப்படம் வீடியோ ஆதாரங்களையும் காட்ட இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் தேர்தல் ஓட்டுப்பதிவு நெருங்கும் நேரத்தில் விஜய்க்கு எதிராக சங்கீதா செய்யும் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணம் பின்னால் இருந்து அவரை இயக்கும் திமுக தான் என்று தவெக வினர் குற்றம் சாட்டுகின்றனர்.





