- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிக்கே டஃப் கொடுக்கும் சந்தானம், போயஸ் கார்டனில் செய்த தரமான சம்பவம்

ரஜினிக்கே டஃப் கொடுக்கும் சந்தானம், போயஸ் கார்டனில் செய்த தரமான சம்பவம்

- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் “லொள்ளு சபா” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்ட சந்தானம், படிபடியாக முன்னேறி சினிமாவிற்குள் நுழைந்தார். அவர் சினிமாவிற்குள் நுழைந்த சில வருடங்களிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தார்.

சிலரின் வளர்ச்சியை பார்க்கும்போது நமக்கு பிரம்மிப்பு ஏற்படும். அதில் சந்தானத்தின் வளர்ச்சியும் ஒன்று. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் அவர் நுழைந்தபோது பல திரைப்படங்களில் சிறு சிறு காமெடி கதாபாத்திரங்களில்தான் அவர் நடித்து வந்தார். ஆனால் அதன் பின் அவர் பல டாப் ஹீரோக்களின் திரைப்படங்களில் முன்னணி காமெடி நடிகராகவே நடிக்கத் தொடங்கினார்.

- Advertisement -

அதுமட்டுமல்லாது ஒரு கட்டத்திற்குப் பிறகு ஹீரோவாகவே ஆகிவிட்டார் சந்தானம். ஹீரோவாக நடிக்கத் தொடங்கியபோது தொடக்கத்தில் அவரது திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஆனால் இடையே சில சறுக்கல்கள் வந்தன. குறிப்பாக சீரீயஸ் ஹீரோவாக சில திரைப்படங்களில் நடித்தார். அத்திரைப்படங்கள் படுதோல்வியை தழுவின. இந்த நிலையில்தான் கம்பேக் கொடுக்கும் வகையில் “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தில் நடித்தார்.

இத்திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இது வரை 6 கோடிகளை சம்பளமாக வாங்கிவந்த சந்தானம், “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்திற்குப் பிறகு தனது சம்பளத்தை 8 கோடியாக உயர்த்தியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

- Advertisement -

இந்த நிலையில் சந்தானம் போயஸ் கார்டன் பகுதியில் ஒரு புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம். போயஸ் கார்டன் பகுதியில்தான் ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோரின் வீடுகள் இருக்கின்றன. தற்போது அதே பகுதியில் சந்தானமும் வீடு வாங்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

- Advertisement -

சற்று முன்