- Advertisement -
Homeபொழுதுபோக்குநீண்ட இடைவெளிக்கு பிறகு நீட்டான ஹிட் கொடுத்த சந்தானம்... இரண்டு நாட்களில் மட்டும் டிடி ரிட்டன்ஸ்...

நீண்ட இடைவெளிக்கு பிறகு நீட்டான ஹிட் கொடுத்த சந்தானம்… இரண்டு நாட்களில் மட்டும் டிடி ரிட்டன்ஸ் வசூல் இத்தனை கோடியா?…

- Advertisement -

சின்னத்திரையில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சந்தானம். மக்கள் மனதில் பரவலாக பேசப்படும் படங்களை கையில் எடுத்து, அதனை அடிமட்ட அளவில் கலாய்த்து எடுக்கப்பட்ட இந்த லொள்ளு சபாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு நல்ல அறியப்பட்ட சந்தானம், வெள்ளி திரையில் மன்மதன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படத்திலேயே பரவலாக பேசப்பட்ட சந்தானம், தனது டைமிங் காமெடி மூலமாகவும், கவுன்டர் வசனங்களாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார். சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை தொடங்கிய அவரது வெற்றி பயணம், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்தது.

- Advertisement -

சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், தெய்வத்திருமகள், கலகலப்பு என சந்தானத்தின் காமெடி சரவெடிகளை அடுக்கிக் கொண்டே போகலாம். குறிப்பாக, இயக்குனர் ராஜேஷின் கூட்டணியில் அவர் நடித்து வெளியான அத்தனை திரைப்படங்களும் செம்ம ஹிட் அடித்தன. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களில் சந்தானத்தின் காமெடி செமையாக வொர்க் அவுட் ஆகியது.

தொடர்ந்து காமெடியனாகவே நடித்துக் கொண்டிருந்த அவர், கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்தார். பிறகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படத்தில் கதாநாயகனாக, அந்த திரைப்படம் ஓரளவு வெற்றி பெற்றது. பிறகு இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்கள், ஏ ஒன், பாரிஸ் ஜெயராஜ் படங்களும் சந்தானத்திற்கு பெயர் வாங்கி கொடுத்தன.

- Advertisement -

ஆனால் ஒரே மாதிரியான கதைகளில் அவர் தொடர்ந்து நடித்து வந்ததால், ரசிகர்களுக்கு சலிப்பை தட்ட ஆரம்பித்தது. ஏஜென்ட் கண்ணாயிரம், குலு குலு, சபாபதி, டிக்கிலோனா, டகால்டி, பிஸ்கோத் உள்ளிட்ட திரைப்படங்கள் வந்த தடம் தெரியாமல் திரையரங்குகளை விட்டு ஓடின. நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியனாகவே நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த சூழலில் சந்தானத்திற்கு மிகப் பெரிய திருப்பு முனையை கொடுத்துள்ள திரைப்படம் தான் டிடி ரிட்டன்ஸ். வழக்கமான ஜானரில் இந்த படம் எடுக்கப்பட்டிருந்தாலும், அதில் சுவாரஸ்யமான கதை மற்றும் உயிரோட்டம் உள்ள நகைச்சுவை இருந்ததால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மொட்டை ராஜேந்திரன், மாறன், முனிஸ்காந்த், தங்கதுரை உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து செயல்பட்டதால், படம் நல்ல அளவில் ரீச் ஆகியது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆறு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆகியுள்ளது. சந்தானத்திற்கு மிகப்பெரிய வெற்றியை இந்த படம் தேடி கொடுத்து இருப்பதால், நடிகர் உற்சாகத்தில் இருக்கிறாராம்.

- Advertisement -

சற்று முன்