சந்தானம் கதாநாயகனாக நடித்த “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மிகச் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் ஒரு கட்டத்திற்கு பிறகு காமெடி கதைகளில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். தொடக்கத்தில் சில திரைப்படங்கள் ஒர்க்கவுட் ஆனாலும் ஒரு கட்டத்தில் அவரது திரைப்படங்கள் வேலைக்கு ஆகவில்லை. அது போக சீரீயஸான ஹீரோவாக சில திரைப்படங்களில் நடிக்கத்தொடங்கினார். அத்திரைப்படங்களும் எடுபடவில்லை.

இந்த நிலையில்தான் சந்தானம் ஒரு கம்பேக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தில் நடித்தார். தற்போது இத்திரைப்படம் மாஸ் ஹிட் ஆகியுள்ளது. குறிப்பாக காமெடி காட்சிகள் அனைத்தும் ஒர்க்கவுட் ஆகியுள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் பலரும் விழுந்து விழுந்து சிரித்ததாக படத்தை பாராட்டினார்கள்.
எப்போதும் ஒரு நடிகர் தனது திரைப்படம் ஹிட் அடித்துவிட்டால் தனது சம்பளத்தை உயர்த்துவது வழக்கம். தற்போது சந்தானமும் தனது சம்பளத்தை உயர்த்தி உள்ளாராம். இதுவரை சந்தானம் 5 அல்லது 6 கோடிகளையே சம்பளமாக வாங்கிவந்தார்.

ஆனால் “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தின் வெற்றி அவருக்கு ஒரு மிகப்பெரிய கம்பேக்கை கொடுத்துள்ளதால் இனி வரும் திரைப்படங்களில் சந்தானம் தனது சம்பளத்தை 8 கோடிகளாக உயர்த்தி உள்ளாராம். இவ்வாறு ஒரு தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளரான பிஸ்மி தனது வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். “டிடி ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தை தொடர்ந்து சந்தானம் நடித்த “வடக்குப்படி ராமசாமி” என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.





