நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1975ம் ஆண்டில் தமிழ் சினிமாவுக்குள் நடிகராக வந்தவர். அவர் நடித்த முதல் படம் கே பாலசந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள். கடந்த 2025ம் ஆண்டில் தனது சினிமா கேரியரில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் பொன்விழா கொண்டாடியிருக்கிறார்.
இதுவரை நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான மொத்த படங்களின் எண்ணிக்கை 171. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம்தான் 171வது படம். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் வசூலை குவித்தது.
தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 அவரது 172வது படமாகவும் அடுத்து ரஜினிகாந்த் இப்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடித்து வரும் தர்மன் அவரது 173வது படமாகவும் உள்ளது. அதன்பிறகு ரஜினி கமல் இணைந்து நடிக்கும் நெல்சன் இயக்கத்தில் ஒரு படமும் ஏற்கனவே லிஸ்ட்டில் உள்ளது.
இந்த சூழலில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த பல மாதங்களாகவே தனது வாழ்க்கை வரலாறை அதாவது அவரது சுயசரிதையை எழுதி வருகிறார். அவர் சொல்ல சொல்ல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் அதை அவரது பயோகிராஃபியாக எழுதி வருகிறார். இது ஒரு சாதாரண மனிதன் சரித்திர நாயகனாக மாறிய ஒரு அற்புதமான உண்மை கதையாக மாறி வருகிறது.
இந்த நிலையில் இந்த பயோகிராஃபியை ஒரு புத்தகமாக வெளியிடுவது மட்டுமின்றி ஒரு திரைப்படமாக உருவானால் இன்னும் பெரிய வரவேற்பை பெறும் என்று ரஜினிகாந்த் யோசித்து இருக்கிறார். ரஜினிக்கு எல்லா மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். உலகம் முழுவதும் அவரது ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
அதனால் தனது வாழ்க்கை வரலாறை ஒரு பான் இந்தியா படமாக உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவரது நண்பர்கள் சிலரிடமும் பேசியிருக்கிறார். அப்போதுதான் தமிழ் இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் உருவாகும் ஒரு படமாக்க திட்டமிட்டுள்ளார். ஆனால் வரலாற்று ஆவணமாக மாறப் போகிற இந்த படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.





