- Advertisement -
Homeபொழுதுபோக்கு"ஒரே ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு நான் படுற பாடு இருக்கே"... கலக்கும் இங்க நான் தான்...

“ஒரே ஒரு கல்யாணத்தை பண்ணிட்டு நான் படுற பாடு இருக்கே”… கலக்கும் இங்க நான் தான் கிங் பட ட்ரெய்லர்… அடுத்த பாய்ச்சலை நிகழ்த்துவாரா காமெடி கிங்…

- Advertisement -

சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டிய நடிகர்களின் மிக முக்கியமான ஒரு சந்தானம். தனக்கே உண்டான கவுன்டர்களின் மூலம் காமெடி கிங்காக வலம் வந்த அவர், ரஜினி விஜய் அஜித் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நகைச்சுவையில் கலக்கினார்.

 

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் சந்தானத்தை விட்டால் ஆளில்லை என்று சொல்லிக் கொள்ளும் வகையில் அவர் பிசியாக இருக்க திடீரென தனது ரூட்டை மாற்றிக் கொண்டார் நடிகர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்னும் திரைப்படத்தின் மூலம் அவர் கதாநாயகனாக அறிமுகமானார். தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட அந்த திரைப்படம் இங்கு நல்ல வரவேற்பை பெற்றது.

 

இதனைத் தொடர்ந்து, கதாநாயகனாக நடிக்கவே கவனம் செலுத்தி வந்தார் சந்தானம். நகைச்சுவையை விடாமல், தனக்கு ஏற்ற கதாபாத்திரம் எதுவோ அதிலேயே பயணித்து சபாஷ் போட வைத்தார். இந்த காலகட்டத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு திரைப்படம் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது.

 

ஆனால் அதன் பிறகு சந்தானத்திற்கு எந்த ஒரு திரைப்படம் அந்த அளவு பெரிதாக கை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். எண்ணற்ற திரைப்படங்கள் அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகி வந்த தடம் தெரியாமல் மறைந்து போனது. இதற்கு சந்தானம், கதாநாயகனாக நடிப்பதை கைவிட்டு விடலாம் என்று பலரும் கமெண்ட் அடித்து வந்தனர்.

 

ஆனால் இது எல்லாம் கண்டுகொள்ளாத நடிகர் தொடர்ந்து ஹீரோ மெட்டீரியலாகவே வலம் வந்தார். இப்படியான சூழலில் தான் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் அவருக்கு திருப்பு முனையை கொடுத்தது. லொள்ளு சபா நிகழ்ச்சியின் குழுவினர் அந்த திரைப்படத்தில் கலக்கி இருக்க, டி டி ரிட்டன்ஸ்க்கு ரசிகர்கள் பச்சைக்கொடி காட்டினர்.

 

இதனை தொடர்ந்து வெளியான வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படமும் சந்தானத்துக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் சந்தானம் தற்போது இங்கு நான் தான் கிங்கு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆனந்த் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தை அன்புச் செழியன் தயாரித்துள்ளார். இதில் தம்பி ராமையா, பாலா உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள். ஒரு கல்யாணத்தை செய்துவிட்டு அவர் படாத பாடு படுவது போன்ற காட்சிகள் ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளன. வரும் பத்தாம் தேதி இந்த திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சற்று முன்