- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் படங்களில் நடிக்க மறுத்த சந்தானம், இதனால் அந்த 2 படங்களில் நடிக்கும் வாய்ப்பை எஸ்கே...

சிவகார்த்திகேயன் படங்களில் நடிக்க மறுத்த சந்தானம், இதனால் அந்த 2 படங்களில் நடிக்கும் வாய்ப்பை எஸ்கே இழந்தாரா? சர்ச்சையை கிளப்பிய விவகாரம்!

- Advertisement -

நடிகர் சந்தானம், நடிகர் சிலம்பரசன் வாயிலாக தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமானவர். விஜய் டிவியில் லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சியில் சினிமா படங்களை கலாய்க்கும் கேரக்டர்களில் நடித்து பிரபலமானவர் சந்தானம். அவரை தனது வல்லவன் மற்றும் மன்மதன் படங்களில் காமெடி ரோலில் நடிக்க வைத்தவர் சிலம்பரசன்தான்.

பிறகு பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்து சந்தானம் முன்னணி காமெடி நடிகராக மாறினார். சச்சின் தலைவா பில்லா ஒஸ்தி ஒரு கல் ஒரு கண்ணாடி நண்பேன்டா பாஸ் என்கிற பாஸ்கரன் சிவா மனசுல சக்தி ஆல் இன் ஆல் அழகுராஜா அலெக்ஸ் பாண்டியன் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க என சந்தானம் முன்னணி நடிகர்களுடன் நடித்த காமெடி ரோல் பெரிய அளவில் கிளிக் ஆனது.

- Advertisement -

ரஜினியுடன் லிங்கா படத்தில் சந்தானம் காமெடி செய்திருந்தார். அதே போல் ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி படத்திலும் காமெடி ரோலில் நடித்திருந்தார். விஜய் அஜீத்குமார் ஆர்யா சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் சந்தானம் காமெடியாக நடித்த நிலையில், ஒரு கட்டத்தில் ஹீரோவாக மாறினார்.

தில்லுக்கு துட்டு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் டிடி ரிட்டர்ன்ஸ் இனிமே இப்படிதான் குலுகுலு கண்ணா லட்டு தின்ன ஆசையா என பல படங்களில் சந்தானம் ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றார். கடந்தாண்டில் சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்போது டிடி டபுள்ஸ் டெவில் என்ற படம் சந்தானம் நடிப்பில் வெளிவர உளளது.

- Advertisement -

நடிகர் சந்தானம் போலவே, நடிகர் சிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் இருந்து தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி இப்போது டாப் 10 நடிகர்களில் ஒருவராக முன்னணியில் இருக்கிறார். அமரன் படத்தை தொடர்ந்து இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற தனது 25வது படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் சிவகார்த்திகேயனுடன் சந்தானம் 2 படங்களில் நடிக்க மறுத்ததாக ஒரு தகவல் லேட்டஸ்ட் ஆக வெளிவந்துள்ளது.

அதாவது சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்து நடிகராக மாறிய ஆரம்ப காலகட்டத்தில் அவருடன் நடிக்க சந்தானம் மறுத்துள்ளார். சிவகார்த்திகேயன் ஹீரோ என்றால் அவருடன் காமெடி ரோலில் நடிக்க மாட்டேன் என்று கண்டிப்பாக கூறியிருக்கிறார். அதனால்தான் ராஜா ராணி மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டு அந்த கேரக்டர்களில் ஜெய் மற்றும் வினய் நடித்துள்ளதாக இப்போது தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன், சந்தானம் ஒரு படத்தில் கூட இதுவரை இணைந்து நடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. சூரி சதீஷ் ரோபோ சங்கர் யோகிபாபு போன்றவர்களே எஸ்கேவுடன் பல படங்களில் காமெடி ரோலில் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்