- Advertisement -
Homeபொழுதுபோக்குஸ்டார் படம் ரிலீஸ் தள்ளி வைக்க திடீர் முடிவு? தயாரிப்பாளர் சொன்ன பதில் -...

ஸ்டார் படம் ரிலீஸ் தள்ளி வைக்க திடீர் முடிவு? தயாரிப்பாளர் சொன்ன பதில் – போடு வெடிய, கடைசியில் இப்படி நடந்து போச்சே?

- Advertisement -

நடிகர் கவின் தமிழ் சினிமாவில் இப்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். துவக்கத்தில் விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர் மத்தியில் நல்ல பரிச்சயத்தை பெற்றார். தொடர்ந்து அவர் நடித்த டாடா, லிப்ட் ஆகிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று கவினுக்கு நல்ல ஒரு சினிமா எதிர்காலத்தை உருவாக்கித் தந்தது.

அதன் பிறகு இப்போது அவர் நடித்துள்ள படம் ஸ்டார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அபரிமிதமான ஒரு வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக டீசரில் இடம் பெற்றுள்ள சில காட்சிகளில் கவின் நடிப்பு வேற லெவலில் இருப்பதாக பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த படத்துக்கு மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது,

- Advertisement -

ஆனால் ஸ்டார் படத்தில் முதலில் நடிக்க இருந்தது பார்க்கிங் பட நாயகன் ஹரீஷ் கல்யாண் தான். ஆனால் வேறு சில படங்களில் அவர் பிஸியாக இருந்ததால், இந்த படத்தில் நடிக்க கேட்ட போது, மறுப்பு தெரிவித்துவிட்டார். ஆனால் இப்போது ஸ்டார் டீசர் வெளியான பிறகு அந்த படத்துக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை பார்த்து ஹரீஷ் கல்யாண் அடடா, நல்ல வாய்ப்பை இப்படி மிஸ் பண்ணிட்டோமே என்று தொடர்ந்து புலம்பி கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த வாரத்தில் ஸ்டார் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை சுப்பையா என்ற விநியோகஸ்தர் வாங்கியிருக்கிறார். அவர் தமிழ்நாடு தியேட்டர்களில் ஸ்டார் படத்தை திரையிடுவதற்கான உரிமத்தை 8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே மாநாடு படத்தின் தமிழ்நாடு தியேட்டர்களில் வெளியிடும் உரிமத்தை வாங்கி பல கோடிகள் லாபம் பார்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆனால் இப்போது ஸ்டார் படம் வெளியாகும், அதே நாளில் சந்தானம் நடித்த இங்க நான்தான் கிங்கு என்ற படமும் வெளியாக இருக்கிறது. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு அபிமானத்தை பெற்ற படமாக இருக்கிறது. இந்த படத்தை ரிலீஸ் செய்பவர் செல்வாக்கு மிகுந்த மதுரை அன்பு என்பதால், அவர் தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான முக்கிய தியேட்டர்களை பிடித்துக் கொள்வார் என்று கூறப்படுகிறது. இதனால் ஸ்டார் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காது என்ற சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து ஸ்டார் படத்தின் தயாரிப்பாளரிடம் இதுகுறித்து பேசிய விநியோகஸ்தர் சுப்பையா, படத்தை ஒரு வாரம் தள்ளி ரிலீஸ் செய்யலாம் என்று கூறியிருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட தேதியில் ஸ்டார் படம் வெளியாக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இதனால் அப்சட்டான சுப்பையா குழப்பத்தில் இருந்திருக்கிறார். ஆனால் திடீரென மதுரை அன்பு, சந்தானம் நடித்த இங்க நான்தான் கிங்கு படத்தை ஒரு வாரம் தள்ளி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஸ்டார் படம் எதிர்பார்த்தபடி, அதிக தியேட்டர்களில் முக்கிய நகரங்களில் வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்