- Advertisement -
Homeபொழுதுபோக்குபேராசை அதிகாரம் புகழ் மீதான தீராத பசி… கரூர் துயர சம்பவம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ்...

பேராசை அதிகாரம் புகழ் மீதான தீராத பசி… கரூர் துயர சம்பவம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளிப்படுத்திய கோபம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். பல படங்களில் அவரே சொந்த குரலில் பாடவும் செய்திருக்கிறார். சமீபத்தில் கரூரில் தவெக பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்ட 41 பேர் நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதற்கு தங்களது கண்டனத்தை வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கரூரில் தவெக பொதுக்கூட்டத்தில் நடந்த துயர சம்பவம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, கரூர் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட அப்பாவிகளின் உயிரிழப்பு மிகவும் தனிப்பட்ட முறையில் என்னை பாதித்துள்ளது. உண்மையிலேயே என் இதயத்தை இது நொறுக்கிவிட்டது.

- Advertisement -

இதை ஏற்றுக்கொள்ள முடியாத துயரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் இதயம் அமைதி காண வேண்டும் என மனதார விரும்புகிறேன். இந்த கொடூரமான சம்பவத்தால் ஏற்பட்ட காயம் கோபம் மற்றும் இயலாமை ஆகியவற்றிலிருந்து என்னை மீட்க எனக்கு சிறிது காலம் தேவைப்பட்டதற்காக வருந்துகிறேன்.

புரிதல் அற்ற பேராசை அதிகாரம் மற்றும் புகழுக்கான தீராத பசி, பொதுமக்களின் கண்ணோட்டத்தை மாற்றக்கூடிய முழுமையான முயற்சி இல்லாமை, இன்னும் கூடுதல் அதிகாரத்திற்கான பேய்த்தனமான தாகம் அத்துடன் அதிக துரதிர்ஷ்டமும் சேர்ந்து நம்மை இங்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.

- Advertisement -

வெளிப்படை தன்மையை செயல்படுத்தும் ஒரு சூழலை உருவாக்க நாம் ஒரே குடும்பமாக ஒன்றிணையும் வரை மட்டுமே இவை அனைத்தும் தொடரும். இன்றைய டிஜிட்டல் உலகில் இது சாத்தியமே. அந்த கட்டத்தை அடையும் வரையில் வேறுபட்ட கருத்துக்களை நாம் நிறுத்தி வைத்திருக்கலாம். இந்த துயரத்தில் நாம் இழந்த அப்பாவி ஆத்மாக்கள் சாந்தி அடையட்டும்.

இனி தயவுசெய்து உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். உங்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் அமைதிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அந்த பதிவில் கூறி இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்