கடந்த 1987ம் ஆண்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்தில் கமலுக்கு மனைவியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சரண்யா. மனசுக்குள் மத்தாப்பூ என் ஜீவன் பாடுது அஞ்சலி தாயம் ஒண்ணு நான் புடிச்ச மாப்பிள்ளை கோட்டை வாசல் சீவலப்பேரி கருத்தம்மா உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார்.
இயக்குனர் மற்றும் நடிகர் பொன்வண்ணனை சரண்யா திருமணம் செய்துக்கொண்ட பின், சில ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் சினிமாவில் 2வது சுற்றை ஆரம்பித்தார். குறிப்பாக அம்மா கேரக்டர்களில் நடிகை சரண்யா பொன்வண்ணனுக்கு மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது. பல படங்களில் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்தார்.
அந்த வகையில் இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் ஜீவாவுக்கு அம்மாவாக நடித்த பின் பல படங்களில் ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதில் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மா, திருவிளையாடல் ஆரம்பம், வேலையில்லா பட்டதாரி கொடி படங்களில் தனுஷின் அம்மா, பாண்டி படத்தில் ராகவா லாரன்ஸ்சின் அம்மாவாக நடித்திருந்தார்.
தொடர்ந்து வேல் படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாகவும், எம்மகன் படத்தில் நடிகர் பரத், ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன், கிரீடம் படத்தில் நடிகர் அஜீத்குமார், தவமாய் தவமிருந்து படத்தில் நடிகர் சேரன், களவாணி களவாணி 2 படத்தில் நடிகர் விமல், ஒரு காதல் ஒரு கண்ணாடி படத்தில் நடிகர் உதயநிதி, குட்டிப்புலி படத்தில் நடிகர் சசிக்குமார், முத்துக்கு முத்தாக படத்தில் நடிகர் நட்டி நடிகர் விக்ராந்த் ஆகியோருக்கு அம்மாவாகவும் சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார்.
நீர்ப்பறவை படத்தில் நடிகர் விஷ்ணுவிஷால் அம்மாவாக நடித்திருந்தார். நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுக்கு அம்மாவாக நடித்திருந்தார். யாவரும் நலம் படத்தில் மாதவனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். திண்டுக்கல் சாரதி படத்தில் நடிகர் கருணாஸின் அம்மாவாக இருந்தார். எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவின் அம்மாவாகவும் நடித்திருந்தார்.
இப்படி தமிழ் சினிமாவில் ரஜினி கமல் விஜய் தவிர்த்து அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் அம்மாவாக நடித்த ஒரே ஒரு நடிகை சரண்யா பொன்வண்ணன் மட்டும்தான். இதில் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதியின் அம்மாவாக நடித்திருந்த சரண்யா பொன்வண்ணன், மத்திய அரசின் சிறந்த நடிகை தேசிய விருது பெற்றார். அதே போல் கோலமாவு கோகிலா படத்திலும் நயன்தாராவின் அம்மாவாக சரண்யா நடிப்பு வேற லெவலில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.





