விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த வாரிசு படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. சரத்குமார், பிரபு, ஷாம், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சங்கீதா என பலரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சரத்குமார், விஜய்தான் சூப்பர் ஸ்டார் எனக் கூறினார்.
தமிழ் சினிமாவில் 45 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் ரஜினிகாந்த் வலம் வந்துக்கொண்டிருக்கிற நிலையில், விஜயை எதற்கு சூப்பர் ஸ்டார் என சரத்குமார் கிளப்பி விடுகிறார் என யோசிக்காமல் விஜய் ரசிகர்கள் பலரும், இனி ரஜினிதான் நமக்கு போட்டி என்று கருதிவிட்டனர். இதனால் சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் மல்லுக்கட்டி சண்டை போட்டுக்கொண்டனர்.
ஆனால் உண்மையில் அவர் விஜயை சூப்பர் ஸ்டார் என கூறியதற்கு காரணம், விஜயின் போட்டியாளர் ரஜினிகாந்த் என்பதற்காக அல்ல. ரஜினி இடத்துக்கு விஜய் வந்துவிட்டார் என்று கூறி, நடிகர் அஜீத்குமாரை கடுப்பேத்த தான் என்ற தகவல் இப்போது வெளிவந்துள்ளது. அதாவது அஜீத் மீது நீண்ட காலமாகவே பயங்கர கடுப்பில் இருந்து வருகிறார் சரத்குமார்.
தமிழ் சினிமாவில் மிக பிஸியாக சரத்குமார் ஒரு காலகட்டத்தில் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது தசரதன், நம்ம அண்ணாச்சி, முன் அறிவிப்பு போன்ற படங்களில் சரத்குமாருக்கு ஜோடியாக ஹீரா நடித்திருந்தார், அந்த காலகட்டத்தில் ஹீரா முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தார். அதே வேளையில் நடிகர் அஜீத்குமாரிடம் அவர் காதல் வயப்பட்டிருந்தார்.
நல்ல உயரமும், கட்டழகான தோற்றமும் கொண்ட சரத்குமார், ஹீராவிடம் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார். இதை தெரிந்துக்கொண்ட ஹீரா, இதுகுறித்து அஜீத்குமாரிடமும் கூறியிருக்கிறார். ஒருமுறை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஹீராவை காரில் டிராப் செய்ய அஜீத்குமார், அங்கு இருந்த சரத்குமார் முன்னிலையில் ஹீராவை முத்தமிட்டு, கொஞ்சிவிட்டு சரத்குமாரை வெறுப்பேற்றிச் சென்றதாக தெரிகிறது.
இதன்பிறகு ஹீராவை விட்டு ஒதுங்க ஆரம்பித்த சரத்குமார், அஜீத் மீது ஒருவித அதிருப்தியில் இருந்திருக்கிறார். ஹீராவின் அம்மா சம்மதிக்காததால், ஒரு கட்டத்தில் அஜீத்- ஹீரா பிரிந்த நிலையில் அதன்பின் ஷாலினியை அஜீத்குமார் திருமணம் செய்திருக்கிறார். இந்த சூழலில் பல ஆண்டுகளாகவே அஜீத் மீது இருந்த கடுப்பில், விஜயை உயர்த்தி பேச சூப்பர் ஸ்டார் என்ற பஞ்சாயத்தை சரத்குமார் கிளப்பி விட்டது இப்போது வைரலாகி வருகிறது.





