- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஷால் நடித்து இயக்கிய மகுடம் படத்துக்கு இப்படி ஒரு பிரச்னையா? அப்போ கோர்ட்டுக்கு பஞ்சாயத்து போவது...

விஷால் நடித்து இயக்கிய மகுடம் படத்துக்கு இப்படி ஒரு பிரச்னையா? அப்போ கோர்ட்டுக்கு பஞ்சாயத்து போவது உறுதி… ஆர்கே செல்வமணியும் கண்டுக்கலையா?

- Advertisement -

நடிகர் விஷால் நடிப்பில் கடந்தாண்டு துவக்கத்தில் வெளியான மதகஜ ராஜா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 12 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த படம் பல முட்டுக்கட்டைகளை தாண்டி வெளியான நிலையில் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இதில் அஞ்சலி வரலட்சுமி சந்தானம் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

மதகஜ ராஜா படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடித்த படம் எதுவும் ரிலீஸாகவில்லை. தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிட கட்டுமான பணிகளில் அவர் தீவிரம் காட்டிய நிலையில் படப்பிடிப்பில் அதிகமாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் இயக்குனர் ரவி அரசு இயக்கத்தில் மகுடம் என்ற படத்தில் விஷால் நடித்தார்.

- Advertisement -

அந்த படத்தை டைரக்ட் செய்வதற்காக கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற பொறுப்புகளின் அடிப்படையில் அவர் 1.20 கோடி ரூபாய் சம்பளம் கேட்ட நிலையில் இறுதியில் ரூ. 75 லட்சம் சம்பளம் தருவது என முடிவாகி அதில் 20 லட்சம் ரூபாய் முன்பணமாக அவருக்கு தரப்பட்டது.

ஆனால் படப்பிடிப்பு துவங்கிய சில வாரங்களில் படத்தின் நாயகன் விஷால் இயக்குனர் ரவி அரசு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் மகுடம் படத்தில் இருந்து விலகி விட்டார். அதன்பிறகு மகுடம் படத்தை நடிகர் விஷாலே டைரக்ட் செய்து முடித்து விட்டார். இந்நிலையில் இந்த படத்துக்காக ரவி அரசுக்கு பேசப்பட்ட சம்பளத்தில் ரூ. 55 லட்சம் பாக்கியை அவர் விஷாலிடம் கேட்டுள்ளார்.

- Advertisement -

ஆனால் இந்த படத்தை இயக்கிய டைரக்டர் நான்தான். அதனால் மீதி ரூ. 15 லட்சம்தான் தருவேன். 40 லட்சம் ரூபாய் தர முடியாது என்று விஷால் ரவி அரசுவிடம் மறுத்து கூறியிருக்கிறார். இந்த பிரச்னை குறித்து பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணியிடம் ரவி அரசு பேசிய போது, கொடுக்கிறதை வாங்கீட்டு போங்க, எதற்கு தேவையில்லாத பிரச்னை என்றும் அவர் கூறியதாக தெரிகிறது.

அதனால் இந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக இயக்குனர் ரவி அரசு கோர்ட்டுக்கு செல்ல வாய்ப்புள்ளது. மகுடம் படம் ரிலீஸ் நேரத்தில் தனக்கு பேசியபடி சம்பளத்தை தராமல் நடிகர் விஷால் ஏமாற்றி விட்டார் என்று இயக்குனர் ரவி அரசு கோர்ட்டில் வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளது என்று இந்த தகவலை மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்