சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளிடையே காதல் ஏற்படுவது இயல்புதான். இப்படி பல நடிகர்கள் நடிகைகள் திருமண வாழ்வில் இணைந்திருக்கின்றனர். ஆனால் அவர்களது திருமண வாழ்க்கை கடைசி வரை நீடித்ததா என்று கேட்டால் அதை உறுதியாக சொல்ல முடியாது. ஏனெனில் பலரது திருமண வாழ்க்கை பாதியில் முடிவுக்கு வந்திருக்கிறது.
உதாரணமாக நளினி ராமராஜன் ரவிமோகன் ஆர்த்தி தனுஷ் ஐஸ்வர்யா சீதா பார்த்திபன் என பலரை சொல்லலாம். இதில் நடிகர் கமல்ஹாசன் வாணி கணபதி சரிகா என 2 மனைவிகளை அடுத்தடுத்து பிரிந்த நிலையில் கமல் கவுதமியுடன் லிவிங் டு ரிலேசன்ஷிப்பில் இருந்தும் பிரிந்து விட்டார். இன்னும் சில நடிகர் நடிகைகள் தங்களது திருமண உறவு முறிந்தாலும் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வராமல் அப்படியே மறைத்தும் விடுகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். கடந்த 1990களில் நட்சத்திர நடிகராகவும் வலம் வந்தவர். மும்பையில் ஆரம்பத்தில் இருந்த அவர் சினிமா தயாரிப்பாளராக தான் தமிழ் சினிமாவுக்குள் வந்தார். கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தை தயாரித்தார். பிறகு நடிகராகவும் ஒரு கட்டத்தில் மாறினார்.
ஆனால் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே திருமணமானவர் சரத்குமார். அவரது மனைவி பெயர் சாயாதேவி மும்பையை சேர்ந்தவர். சினிமாவில் நடித்து பிரபலமான பிறகு மனைவியை சரத்குமார் பிரிந்து விட்டார். பிறகு தன்னுடன் 4 படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஹீராவை ஒருதலையாக அவர் காதலித்தார். ஆனால் சரத்குமார் திருமணமானவர் என்பதால் ஹீரா அவரை ஏற்கவில்லை.
தொடர்ந்து சூரியவம்சம் மூவேந்தர் உள்ளிட்ட படங்களில் தன்னுடன் நடித்த தேவயானியை நடிகர் சரத்குமார் காதலித்தார். தேவயானியும் சரத்குமார் காதலை ஏற்க மறுத்துவிட்டார். பிறகு நாட்டாமை நாடோடி மன்னன் படங்களில் தன்னுடன் நடித்த நடிகை மீனாவை சரத்குமார் காதலித்துள்ளார். ஆனால் வயது வித்யாசம் காரணமாக இந்த காதலை ஏற்க முடியாது என மீனாவின் அம்மா நோ சொல்லி விட்டார்.
இதற்கிடையே நடிகை நக்மா மீது சரத்குமாருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. ஜானகிராமன் ரகசிய போலீஸ் படங்களில் இருவரும் இணைந்த நடித்தனர். அப்போது இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. சென்னையில் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்ததாக அப்போது தகவல் வெளியானது. ஆனால் சரத்குமார் போட்ட கண்டிஷன்களால் விரக்தியடைந்த நக்மா பிரிந்து சென்று விட்டார். அதன் பிறகுதான் நடிகை ராதிகாவை நடிகர் சரத்குமார் 2வது திருமணம் செய்ததாக இணையத்தில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.





