தமிழ் சினிமாவில் சியான் விக்ரம், மிகச்சிறந்த நடிகராக வலம் வந்துக் கொண்டு இருக்கிறார். ஒரு படத்தில் எந்த கேரக்டரில் நடித்தாலும் அதில் தன் பெயர் சொல்லும்படியாக, நிறைய மெனக்கெட்டு தன் நடிப்பை தருபவர். சியான் விக்ரம் என்றாலே, நடிப்புக்காக தன்னை வருத்திக்கொள்ள தயங்காதவர்.
சியான் விக்ரம், சேது படத்தில் துவங்கி காசி, அந்நியன், ஐ என அவரது படங்களுக்காக தன் உடம்பை வருத்திக் கொண்டவர். பிதாமகன் படத்தில், வித்யாசமான கெட்டப்பில் இருப்பார். படம் முழுக்க, ஒரு மாதிரியான சேஷ்டைகளை செய்துக்கொண்டே இருப்பார். இயக்குநர் பாலாவின் மிக விருப்பமான நடிகர் சியான் விக்ரம்.
நடிகர் கமல்ஹாசன், பரமக்குடியைச் சேர்ந்தவர். சியான் விக்ரமும் பரமக்குடியைச் சேர்ந்தவர்தான். கமலைப் போலவே, நடிப்புக்காக அதிக சிரத்தை எடுப்பது, மெனக்கெடுவது, உடலை வருத்திக் கொள்வது என, கமலை அப்படியே பின்பற்றுபவர் சியான் விக்ரம்.
இப்போது, கமலை போலவே, தன்னை மார்க்கெட் செய்துகொள்வதிலும், கமலையே, சியான் விக்ரம் பின்பற்றி வருகிறார். அதாவது, இதுவரை சியான் விக்ரம் பெற்று வந்த சம்பளம் ரூ. 22 கோடி. தங்கலான் படத்தில் நடித்த பிறகு, பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் அவர் ஒத்துக்கொள்ளவில்லை. இது, பலருக்கும் புரியவில்லை.
இந்நிலையில்,. தங்கலான் படம் ரப் காப்பி வந்த பிறகு படம் வேற லெவலில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது சம்பளத்தை 22 கோடியில் இருந்து ரூ. 50 கோடியாக உயர்த்தி விட்டார் சியான் விக்ரம். அதாவது, சித்தா படத்தை இயக்கிய அருண்குமார் படத்தில் சியான் விக்ரம் நடிக்க ஒத்துக்கொண்டுள்ளார். இந்த படத்தில், அவரது சம்பளம் ரூ. 50 கோடி என்பது உறுதியாகி உள்ளது.
கமல்ஹாசன்தான், தன்னை கமர்ஷியலாக மார்க்கெட்டிங் செய்து கொள்வதில் மிக புத்திசாலியாக பார்க்கப்படுகிறார். அந்த வரிசையில் இப்போது சியான் விக்ரமும், தனது மிகச்சிறந்த படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில், தனது சம்பளத்தை இரண்டு மடங்குக்கு மேலாக, அதாவது 22ல் இருந்து 50 கோடி ரூபாயாக உயர்த்தி, நடிகர்களின் சம்பள போட்டியில் தனக்கான ஒரு இடத்தை பெற்றுவிட்டார்.இத்தனை நாட்கள் அவர் பொறுமையாக காத்திருந்தது, இதற்காக தான் என்பதும் தெரிய வந்துள்ளது.





