- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி 171ல் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்ட தயாரான டைரக்டர் லோகேஷ் கனகராஜ் - அட...

ரஜினி 171ல் பல அதிசயங்களை நிகழ்த்திக் காட்ட தயாரான டைரக்டர் லோகேஷ் கனகராஜ் – அட இப்படி பல தரமான சம்பவங்கள் இருக்கா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது, தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில தினங்களில் முடிவடையும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் 60 நாட்கள் ரஜினிகாந்த் கால்ஷீட் தர வேண்டும் என்று வேட்டையன் படக்குழுவினர் கேட்டதாக சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. இதனால் ரஜினிகாந்த் அப்செட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏனெனில் ரஜினிகாந்த் வருகிற மே 1ம் தேதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கம் தனது 171வது படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதற்கான பூஜையும், பட துவக்க விழாவும் வரும் மே 1ம் தேதி நடத்த ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு மாதங்கள் அவர்கள் கூடுதல் கால்ஷீட் கேட்பதால் குழப்பம் நீடிக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் ரஜினி 171 படத்தில், பல தரமான சம்பவங்களை நிகழ்த்திக் காட்ட டைரக்டர் லோகேஷ் கனகராஜ் முடிவு செய்து இருக்கிறார். அந்த வகையில் இந்த படத்தில் நடிக்க வேண்டிய கேரக்டர்கள் குறித்து மிக மிக நுணுக்கமாக ஆராய்ந்து, சிறந்த நடிகர்களை நல்ல கேரக்டரில் நடிக்க வைத்து படத்தை வேற லெவலில் கொண்டுவர இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு வருகிறார்.

அந்த வகையில் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டிய கேரக்டரில் ரன்வீர் சிங் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. அதே போல் இந்த படத்தில் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். அவர் ரஜினிக்கு மகளாக நடிக்கலாம் என்று பேசப்படுகிறது. இந்த படத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடிப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் மிக முக்கியமான ஒரு தரமான சம்பவமாக, நடிகர் ரஜினிகாந்துடன் சத்யராஜ் நடிக்கிறார். ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு மேலாக, ரஜினிகாந்த், சத்யராஜ் இணைந்து நடிக்கவில்லை. மிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்த், சத்யராஜ் நடித்த போது, தனக்கு முக்கியத்துவம் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, சத்யராஜ் நடித்த காட்சிகளை ரஜினிகாந்த் குறைக்க சொன்னதாகவும், அந்த மனஸ்தாபம் காரணமாக ரஜினி படத்தில் சத்யராஜ் நடிப்பதில்லை என்று முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், கர்நாடகா காவிரி பிரச்சனையில் ரஜினிகாந்த் மேடையில் இருக்கும்போதே ரஜினியை விமர்ச்சித்து சத்யராஜ் பேசியதும் மிக முக்கிய காரணமானது. அதனால் அவர்களுக்குள் ஒரு பனிப்போர் இருந்து வந்தது. இதையெல்லாம் கடந்து இப்போது ரஜினிகாந்த், சத்யராஜ் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தில் மற்றொரு முக்கிய சம்பவமாக கேமியோ ரோலில் நடிகர் கமல்ஹாசன் நடிக்கிறார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் ரஜினி, கமல் மீண்டும் இணைகின்றனர். இப்படி பல தரமான சம்பவங்களுடன் ரஜினி 171 படத்தை உருவாக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு வருகிறார்.

- Advertisement -

சற்று முன்