- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அர்ஜூனுக்காக தன் வழக்கத்தை திடீரென மாற்றிக்கொண்ட நடிகர் சத்யராஜ் - உங்க கேரக்டரையே...

நடிகர் அர்ஜூனுக்காக தன் வழக்கத்தை திடீரென மாற்றிக்கொண்ட நடிகர் சத்யராஜ் – உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே தலைவா…

- Advertisement -

நடிகர் சத்யராஜ், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக அற்புதமான நடிகர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். முதலில் சின்ன சின்ன ரோல்களில் நடித்த அவரது உண்மையான பெயர் ரங்கராஜ். கோயம்புத்தூரை சேர்ந்தவர். அங்குள்ள அரசுக் கல்லூரியில் பிஎஸ்சி தாவரவியல் படித்தவர். அப்பா சுப்பையா, பெரிய டாக்டர். ஆனாலும் சத்யராஜூக்கு ஆக்டர் ஆவதுதான் கனவு.

நடிகர் சிவக்குமாரை நம்பி, நம்மூர்க்காரர் என்ற முறையில் தைரியமாக சென்னைக்கு ரயிலேறியவர் ரங்கராஜ். பிறகு சத்யராஜாக மாறி பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். நடிகர் சிவக்குமாரும் அவ்வப்போது பட வாய்ப்புகளை பெற்றுத் தந்து உதவினார். அப்படியே படிப்படியாக சத்யராஜ் வளர ஆரம்பித்தார்.

- Advertisement -

ஒரு காலகட்டத்தில் கமல்ஹாசனின் அபிமானம் பெற்ற நடிகராக இருந்த அவர், சட்டம் என் கையில் என்ற படத்தில், சத்யராஜூக்கு வில்லன் கேரக்டர் கொடுத்தார். பிறகு மணிவண்ணன் இயக்கிய 100வது நாள், 24 மணி நேரம், அமைதிப்படை போன்ற படங்கள், சத்யராஜூக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது. முதலில் வில்லனாக நடித்து வந்த அவரை, கடலோர கவிதைகள் படம் மூலம் கதாநாயகனாக மாற்றியவர் இயக்குனர் பாரதிராஜா தான்.

என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கறியே என்று சத்யராஜ் பேசிய டயலாக் தமிழ் சினிமாவில் இப்போதும் டிரண்டிங்கில்தான் இருக்கிறது. ஏனெனில் சமீபத்தில் அவர் செய்த ஒரு விஷயத்தை கேள்விப்பட்ட பலரும், இந்த வசனத்தை பேசிதான் அதை குறிப்பிடுகின்றனர். அதாவது நடிகர் சத்யராஜ் சம்பள விஷயத்தில் மிகவும் கறாரான பேர்வழி. என்ன சம்பளம் பேசப்பட்டதோ அந்த சம்பளத்தை சரியாக கொடுத்துவிட வேண்டும். அதில் குறைப்பதையோ, தாமதம் செய்வதையோ அவர் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்.

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன், சத்யராஜின் மேனேஜர் ராமநாதன் என்பவர் தயாரித்த படங்களில் நடிகர் சத்யராஜ் நடித்தார். அவரை சத்யராஜின் பினாமி என்று பலர் கூறிய நிலையில், இல்லை அவர் மேனேஜர்தான் என்பது உறுதியானது. அவர் தயாரித்த படங்களில் கூட சத்யராஜ் நடித்த போது சம்பளத்தை முழுவதுமாக செட்டில் செய்யச் சொல்லி பைசா பாக்கி இல்லாமல் அவரிடம் வாங்கியிருக்கிறார் சத்யராஜ்.

ஒரு படத்தில் நடிக்க இப்போது ஒன்றரை கோடி முதல் இரண்டு கோடி ரூபாய் சத்யராஜ் சம்பளம் வாங்குகிறார். இதில் நடிக்கும் நாட்களை பொறுத்து சம்பளம் சற்று குறையவோ, கூடவோ செய்யும். ஆனால் நடிகர் அர்ஜூன் மகள் நடித்து, அர்ஜூன் தயாரித்து இயக்கி வரும் ஒரு படத்தில் நடிக்க சத்யராஜ் ரூ. 50 லட்சம் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளா். ஏறக்குறைய ஒரு கோடி ரூபாயை தன் சம்பளத்தில் விட்டுத் தந்திருக்கிறார். அர்ஜூன் மீதுள்ள அபரிமிதமான அன்பு, மரியாதை காரணமாக சத்யராஜ் இந்த தள்ளுபடியை செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்