தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சீமான். வாழ்க்கை சக்கரம் அமைதிப்படை உள்ளிட்ட மணிவண்ணன் இயக்கிய படங்களில் சீமான் பணி செய்திருக்கிறார். பிறகு அவரே திரைப்பட இயக்குனராக மாறி தம்பி பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல படங்களை இயக்கினார்.
அத்துடன் எவனோ ஒருவன் பள்ளிக்கூடம் மாயாண்டி குடும்பத்தார் உள்ளிட்ட பல படங்களில் சீமான் நடித்து நடிகராகவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறார். நாம் தமிழர் கட்சி என்ற அரசியல் இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் அவர் இருந்து வருகிறார். தொடர்ந்து திமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளை அவர் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
இதுவரை நாம் தமிழர் கட்சி சந்தித்த தேர்தல்களில் எந்த ஒரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து நின்றே கணிசமான ஓட்டுகளை பெற்று வருகிறது. ஆனால் இப்போது நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய பிறகு, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள், ஏராளமான தொண்டர்கள் தவெக கட்சிக்கு மாறிவிட்டனர்.
இதனால் தவெக கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மீது, சீமான் கடும் கோபத்தில் இருந்து வருகிறார். சீமான் பேசும் மேடைகளில் தவெக குறித்தும் விஜய் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். சமீபத்தில் விழுப்புரத்தில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பேசிய சீமான், நடிகர் விஜய் கட்சி குறித்து பயங்கரமாக கலாய்த்து பேசி விமர்சித்திருப்பது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த கூட்டத்தில் சீமான் பேசியதாவது, தவெக தொண்டர்களிடம் என்னடா உங்க கொள்கை என்று கேட்டால் தளபதி தளபதி என்று கத்துகிறார்கள். டேய் அப்படி கத்தாதீங்கடா, எனக்கு கேட்கும் போது தலைவிதி தலைவிதி அப்படீன்னு கேட்குது. அதுசரிடா கொள்கை என்ன என்றால் அதற்கும் தளபதி தளபதி என்று கத்துகின்றனர்.
சரிடா எதுக்குடா வந்தீங்க என்று கேட்டால் டீ விக்க டீ விக்க டீ விக்க என்று கத்துகின்றனர். டேய் டீ விக்கவாடா இவ்வளவு பேர் கௌம்பி வந்திருக்கீங்க? சரிப்பா அப்படி ஓரமா போய் டீ விய்ங்க என்று சொல்லிடுவேன். புலி வெறி கொண்டு வேட்டையாடீட்டு போகும் போது அணில் குஞ்சை எல்லாம் கண்டுக்காது. அப்படி ஓரமா போய் மரத்துல ஏறிக்க தான் சொல்லும். அணிலே அணிலே குறுக்க குறுக்க வராதே, ஓரமாய் போய் விளையாடு அணிலே என்றுதான் புலி சொல்லும் என்று சீமான் பேசியது இப்போது வைரலாகி வருகிறது.





