- Advertisement -
Homeபொழுதுபோக்குகோவா சர்வதேச திரைப்பட விழாவில் மறைந்த ஜாம்பவான் இயக்குனர்களுக்கு மரியாதை - அவர்களது படங்கள் திரையிட...

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் மறைந்த ஜாம்பவான் இயக்குனர்களுக்கு மரியாதை – அவர்களது படங்கள் திரையிட தேர்வு!

- Advertisement -

இன்று 57வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் துவங்குகிறது. இந்த விழாவில் சமீபத்தில் மறைந்த இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் அவரது சீடர் கே பாக்யராஜ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களது படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. வரும் 22ம் தேதி முந்தானை முடிச்சு படம் பகல் 12 மணிக்கு திரையிடப்படுகிறது. இந்த நிகழ்வில் பாக்யராஜின் மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் கலந்து கொள்கிறார். பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் ராதா நடித்த முதல் மரியாதை படம் வரும் 23ம் தேதி காலை 11:30 மணிக்கு திரையிடப்பட இருக்கிறது. இதில் நடிகர் மற்றும் இயக்குனர் சித்ராலட்சுமணன் பங்கேற்க உள்ளார்.

சற்று முன்