- Advertisement -
நடிகர் சிவகார்த்திகேயனின் வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 10 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் ஒரு பார்ட்டியில் கலந்துக்கொண்டு வெளியே வருகிறார் சிவகார்த்திகேயன். கருப்பு நிற உடையில் தாடி மீசை கெட்டப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடந்து வந்து ஒரு காருக்குள் தடுமாற்றமாக ஏறுகிறார். செம போதையில் இருப்பது போல காணப்படும் அவரிடம் மும்பை செய்தியாளர்கள் கேள்வி கேட்க அதில் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார். கையை நீட்டி மறைத்து வேண்டாம் வேண்டாம் என்கிறார். பின்னால் ஒரு மாடர்ன் பெண்ணும் காணப்படுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் சிவகார்த்திகேயன் மதுப்பழக்கம் புகைபழக்கம் இல்லாதவர் என்று கூறப்பட்டு வருகிறது.





