- Advertisement -
Homeபொழுதுபோக்குஇவரது வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் - ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கானின் பதிவு வைரல்

இவரது வரவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் – ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த ஷாருக்கானின் பதிவு வைரல்

- Advertisement -

நடிகர் ஷாருக்கான், பாலிவுட் மெகா ஸ்டார்களில் ஒருவராக, சமீப காலமாக வெற்றிப்படங்களை தந்து வருகிறார். கடந்தாண்டு வெளியான இவரது பதான் திரைப்படம், பிளாக் பஸ்டர் மூவியாக, வசூலில் சாதனை படைத்தது. சில ஆண்டுகளாக இந்தி படங்களே சரிவர வெற்றி பெறாத நிலையில், பதான் படத்தின் வெற்றி, இந்தி படவுலகுக்கே ஒரு புத்துயிர் அளிக்கும் விதமாக அமைந்தது.

நடிகர் ஷாருக்கான் ஏற்கனவே, தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில், உயிரே என்ற படத்தில், தக்க தையா தையா தையா பாடல் மூலம், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார், இதில், மனிஷா கொய்ராலா, ஷாருக்கானின் காதலியாக நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து ஹேராம் படத்தில், கமல்ஹாசனின் முஸ்லிம் நண்பராக நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து தமிழில் அவர் நடிக்கவில்லை என்றாலும், இந்த இரண்டு படங்களிலும் நல்ல நடிப்பை தந்ததால், தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தவிர, இந்தியில் இருந்து தமிழில் டப் செய்யும் ஷாருக்கான் படங்களை, தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து, ரசிக்கவே செய்கின்றனர்.

இந்நிலையில், தற்போது தமிழ்பட இயக்குநர் அட்லீ, இந்தியில் ஷாருக்கான் – நயன்தாரா நடித்த ஜவான் படத்தை இயக்கி, படமும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. வசூல், ஆயிரம் கோடி ரூபாயை தாண்டிய நிலையில், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜவான் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக, ஷாருக்கான் டிவிட்டரில் ( எக்ஸ்)சில், ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் பலரும் ஷாருக்கானுக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். அப்போது, விஜய் ரசிகர் ஒருவரும், ஷாருக்கானுக்கு வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

இதனால் உற்சாகமடைந்த ஷாருக்கான், தளபதியின் அடுத்த படத்துக்காக (லியோ) ஆவலுடன் காத்திருக்கிறேன், என பதில் அளித்துள்ளார். இந்த பதிவு, விஜய் ரசிகர்களிடையே பரபரப்பாகி வைரலாகி வருகிறது. ஆயிரம் கோடி வசூல் குவிக்கும் படத்தின் நாயகனே, லியோ படத்தை ஆவலாக எதிர்பார்ப்பதாக கூறியிருப்பது, லியோ படக்குழுவினருக்கும் பயங்கர குஷியை தந்துள்ளது.

சற்று முன்