- Advertisement -
Homeபொழுதுபோக்குவில்லன் ஜெயிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு இப்போது ரசிகர்கள் மாறி விட்டனர் - முன்னணி தெலுங்கு...

வில்லன் ஜெயிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு இப்போது ரசிகர்கள் மாறி விட்டனர் – முன்னணி தெலுங்கு ஹீரோவை குத்திக்காட்டிப் பேசிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். தீனா கஜினி ஏழாம் அறிவு ரமணா கத்தி துப்பாக்கி சர்கார் போன்ற படங்களை தந்த அவர் இப்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 24ம் தேதி சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடக்க உள்ளது. மதராஸி படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வருகிறது.

இதற்கிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்றுப் பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, இன்றைக்கு திரையுலகமும் ரசிகர்களுமே மாறிவிட்டார்கள். அதாவது வில்லன் கதாபாத்திரம் வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டார்கள். நார்கோஸ் மாதிரியான வெப்சீரிஸில் கெட்டது செய்பவன் தான் கதாநாயகனாக உள்ளான்.

- Advertisement -

எழுத்தாளர் ஜெயமோகன் சொன்னதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. ஜெயில் கைதிகளுக்கு எம்ஜிஆர் படத்தை போட்டு காட்டினால் அனைவரும் நல்லவராக இருக்கும் எம்.ஜி.ஆர் தான் வெற்றி பெற வேண்டும் என நினைப்பார்கள். ஒருவர் கூட வில்லனாக இருக்கும் நம்பியார் வெல்ல வேண்டும் என நினைக்க மாட்டார்கள்.

ஆனால் இன்றைக்கு சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் கதாபாத்திரங்கள் தான் இன்றைக்கு கதாநாயகர்களாக உள்ளனர். அப்படி இருக்கும்போது இன்றைய ரசிகர்கள் கெட்டது செய்யும் கதாநாயகன்தான் வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த மனநிலை இன்றைக்கு பரவலாக பெரும்பாலான ரசிகர்கள் மனதில் இருக்கிறது என்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

தெலுங்கில் முன்னணியில் உள்ள ஐகான் ஸ்டார் நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா மற்றும் புஷ்பா 2 படங்களைதான் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இப்படி மறைமுகமாக குத்திக்காட்டி சொல்வதாக ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது. புஷ்பா முதல் பாகத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. அதேபோல் புஷ்பா 2 படமும் உலகளவில் 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

புஷ்பா படத்தில் ரசிகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தை தான் ஆதரித்திருக்க வேண்டும். ஆனால் ரசிகர்கள் செம்மர கடத்தல்காரனாக வரும் புஷ்பாவை ஆதரித்தார்கள். இதேபோல் தமிழிலும் சில படங்கள் வந்துள்ளன. உதாரணமாக அஜீத்குமார் நடித்த மங்காத்தா படத்திலும் வில்லன் கேரக்டரை தான் ரசிகர்கள் ஆதரித்தார்கள். இப்படி கதாநாயகனை விட்டுவிட்டு வில்லனை ஆதரிக்கும் மனப்போக்கு ரசிகர்களிடமே அதிகரித்து வருவதை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் துல்லியமாக கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்