- Advertisement -
Homeபொழுதுபோக்குதந்தை பைக் காதலர்... மகன் கால்பந்து காதலரா... ஃபுட்பால் போட்டிக்காக மகனை அழைத்துக் கொண்டு...

தந்தை பைக் காதலர்… மகன் கால்பந்து காதலரா… ஃபுட்பால் போட்டிக்காக மகனை அழைத்துக் கொண்டு ஸ்பெயின் நாட்டிற்குப் பறந்த ஷாலினி அஜித்குமார்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…

- Advertisement -

நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் இதில் குட் பேட் அக்லி திரைப்படமே முதலில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சூழலில், படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

 

- Advertisement -

இதில் கதாநாயகியாக திரிஷா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதே போல் படத்தில் நடிகை சினேகாவின் கணவர் பிரசன்னா இணைந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 

- Advertisement -

இந்த இரண்டு திரைப்படங்களின் பணிகளை முடித்த பிறகு அஜித்குமார் சில காலம் ஓய்வில் இருக்கிறார். இந்த சமயத்தில் அவர் மீண்டும் பைக் டூரில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முந்தைய காலங்களிலும் அவர் தனது பைக்கில் ஒவ்வொரு ஊராக சுற்றி வருவார்.

 

அதேபோல் ஒரு படத்திற்கு மற்றொரு படத்திற்குமான இடைவேளையில் தனது குடும்பத்துடன் நேரம் செலவழிப்பார் அஜித். அதேபோல், கார்பந்தயம் மற்றும் பைக் பந்தயத்திலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்த வருடம் துபாயில் நடைபெறும் கார் பந்தயத்தில் அவர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில் அஜித்தின் மகனான ஆத்விக்கும் கால்பந்து போட்டியில் சிறந்து விளங்கி வருகிறார். பள்ளிக்கூடத்தில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் அவர் கலந்து கொண்டு வெற்றி அடைந்துள்ளார். சென்னை கிளப் சார்பில் ஜூனியர் கால்பந்து போட்டியிலும் ஆத்விக் பங்கேற்று உள்ளார். அதில் அவர் தங்கம் வென்று அசத்தி இருந்தார்.

 

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும், கால்பந்து போட்டியை காண்பதற்காக தனது மகனை அங்கு அழைத்துச் சென்றுள்ளார் ஷாலினி அஜித்குமார். ஆத்விக், தீவிர ரியல் மேட்ரிக் அணியின் ரசிகராம். அது தொடர்பான போட்டியை பார்ப்பதற்காக தான் மகனை வெளிநாட்டிற்கு ஷாலினி அழைத்துச் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்