நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 50வது படம் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் கடந்தாண்டில் வெளியான ராயன், மாஸ் ஹிட் படமாக இருந்தது. ரூ. 100 கோடி வசூல் பாக்ஸ் ஆபீஸ் லிஸ்ட்டிலும் சேர்ந்தது. ஆனால் அதற்கு பின் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் சரியாக போகவில்லை.
அதே போல் தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான குபேரா படமும் தமிழில் போதிய வரவேற்பை பெறவில்லை. தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டதால் தெலுங்கில் மட்டுமே குபேரா பெரிய வரவேற்பை பெற்றது. தமிழில் ரசிகர்கள் இந்த படத்தை ஆதரிக்காததால் ரூ. 17 கோடி மட்டுமே மொத்தமாக வசூலித்தது.
இந்நிலையில் அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் உருவான 4வது படம் இட்லி கடை. இந்த படத்தில் நித்யா மேனன் அருண் விஜய் பார்த்திபன் ராஜ்கிரண் சத்யராஜ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வணங்கான் படத்துக்கு பிறகு இந்த படத்தில் நடிக்கும் அருண் விஜய் வில்லன் கேரக்டரில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் ஹீரோவாக நடித்த படம் 100 சதவீதம் காதல். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நாயகியாக நடித்தவர் ஷாலினி பாண்டே. இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் இதுதான். அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. தமிழில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாதததால் வேறு மொழி படங்களுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழில் ஷாலினி பாண்டே ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்கத்தில் உருவாகி உள்ள இட்லி கடை படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ஷாலினி பாண்டே நடிகர் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அத்துடன் இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு தங்கச்சி கேரக்டரில் ஷாலினி பாண்டே நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இட்லி கடை படத்தின் நாயகி நித்யா மேனன் என்று கூறப்பட்ட நிலையில், தனுஷூக்கு இந்த படத்தில் 2 நாயகிகள் ஜோடியாக நடித்திருக்கின்றனர். அதில் கிராமப்புற காட்சிகளில் நித்யாமேனன் ஜோடியாகவும், நகர்ப்புற காட்சிகளில் ஷாலினி பாண்டே தனுஷூடன் ஜோடியாக நடித்திருப்பதாகவும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





