இந்த ஆண்டில் வெளியான 200 படங்களில் 9 படங்கள் மட்டுமே ரூ. 100 கோடி வசூலை கடந்த படங்களாக இருந்தன. இதில் விஜய் நடித்த தி கோட் படம் ரூ. 455 கோடி ரூபாய், சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் ரூ. 300 கோடி ரூபாய் என்ற அளவில் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன. அரண்மனை 4, ராயன், மகாராஜா, தங்கலான், வேட்டையன், இந்தியன் 2, கங்குவா ஆகிய படங்களும் ரூ. 100 கோடியை கடந்துள்ளன.
இந்த 9 படங்களில் தங்கலான், இந்தியன் 2 மற்றும் கங்குவா ஆகிய படங்கள் ரூ. 100 கோடியை கடந்த படங்களாக இருந்தாலும் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்த படங்களாக இருந்தன. அதுவும் இந்தியன் 2, கங்குவா படங்களுக்கு இணையத்தில் கிடைத்த விமர்சனம், மிகவும் மோசமாக இருந்தது.
இதையடுத்து யூடியூப் சேனல்களில் புதிய படங்கள் குறித்து விமர்சிக்க தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்துள்ளது. தியேட்டர் வளாகங்கள் மற்றும் தியேட்டருக்கு வெளியே படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களிடம் யூடியூப் சேனல்கள் படம் குறித்து கேட்டு விமர்சனம் செய்யக் கூடாது என்ற புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.
அதாவது படம் பார்த்து ரசிகர்கள் முடிவு செய்வதற்கு முன்பே முதல் நாள் முதல் காட்சியில் படம் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் தியேட்டர்களுக்கு மக்கள் வருவது இல்லை. இதனால் பல படங்கள் தோல்வியடைந்து பெரிய நஷ்டத்தை தயாரிப்பாளர்கள் சந்திக்கின்றனர். இதை தடுக்கவே இந்த நடவடிக்கை என்றும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன் வெளியிட்ட ஒரு பதிவில், பிரபுதேவா நடிப்பில் இன்று வெளியான ஜாலியோ ஜிம்கானா படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள் இவை. போலீஸ்காரனை கட்டிக்கிட்டா லத்தியால அடிப்பான், டாக்டர் ஊசியால குத்துவான், டிரைவர் ஹாரன் அடிப்பான், வாத்தி முட்டி போட சொல்லுவான், பழக்கடைக்காரன் உறிச்சி பார்ப்பான்…
தியேட்டருக்கு வெளியே தர மற்ற விமர்சனம் செய்யக்கூடாது என கொந்தளித்து அதற்கு தடை போட துடிக்கும் திரையுலக ஜாம்பவான்கள், தியேட்டருக்குள்ளேயே ஓடும் இந்த பாடலின் தரம் பற்றி வாயை திறக்காமல் இருப்பது ஏன், ஆகவே மக்களே… இந்த தரமான பாடலைக் கொண்ட படத்தை அனைவரும் பார்த்து பாசிட்டிவ் விமர்சனம் மட்டும் செய்யுங்கள். 100 பேரின் உழைப்பு, பல கோடி முதலீடு போட்டுள்ளார்கள் என்று ப்ளு சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார்.





