- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக மாநாட்டில் அஜீத்குமார் மனைவி ஷாலினி பங்கேற்கிறாரா? வெளியான ஆச்சரிய தகவல் - அஜீத் ரசிகர்கள்...

தவெக மாநாட்டில் அஜீத்குமார் மனைவி ஷாலினி பங்கேற்கிறாரா? வெளியான ஆச்சரிய தகவல் – அஜீத் ரசிகர்கள் ஆதரவால் விஜய் கட்சியினர் உற்சாகம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் பேபி ஷாலினி. சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக பேபி ஷாலினி நடித்திருந்தார். இவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் மலையாள இயக்குனர் பாசில். இவர் பிரபல நடிகர் பகத் பாசில் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பாசில் இயக்கத்தில் ஷாலினி கதாநாயகியாக அறிமுகமான படம் காதலுக்கு மரியாதை. அடுத்து கண்ணுக்குள் நிலவு என்ற படத்தில் ஷாலினி நாயகியாக நடித்திருந்தார். 2 படங்களிலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அடுத்து அமர்க்களம் படத்தில் நடிகர் அஜீத் குமாரும் ஷாலினி ஜோடிதாக நடித்தனர். இந்த படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகர் அஜீத்குமார், விஜய் கடுமையான போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். ஆனால் அவர்கள் இருவருமே நல்ல நண்பர்களாக உள்ளனர். அதேபோல் அஜீத்குமார் மனைவி ஷாலினி, விஜயுடன் 2 படங்களில் நடித்தவர் என்ற முறையில் அவர்களுக்குள் நல்ல நட்பு உண்டு. குடும்ப நிகழ்ச்சிகளில் கூட அஜீத் வீட்டுக்கு விஜய், சங்கீதா வருவதும், விஜய் வீட்டுக்கு ஷாலினி வருவதும் அடிக்கடி நிகழ்ந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து, நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை கிராமத்தில் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக நடிகர் ஷாலினி அஜீத்குமார் பங்கேற்று இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த விழாவில் நடிகர் விஜயின் அப்பா இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர், அம்மா ஷோபா சுந்தரசேகர் ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

- Advertisement -

நடிகர் அஜீத்குமாரின் மனைவி ஷாலினி இந்த அரசியல் மாநாட்டில் பங்கேற்பதன் மூலம் அஜித்குமாரின் ஆதரவு விஜய்க்கு இருப்பது வெட்ட வெளிச்சமாகிறது. அதனால் அஜித் ரசிகர்கள் மத்தியில் விஜய் மாநாட்டுக்கு பலத்த வரவேற்பும், ஆதரவும் கிடைத்துவிடுகிறது. இது தவெக கட்சியினரை உற்சாகமடைய செய்துள்ளது. ஏனெனில் விஜய் அளவுக்கு அஜீத்குமாருக்கும் ரசிகர் கூட்டம் மிக அதிகமாக உள்ளது.

நிச்சயமாக வருகிற 2026 சட்டசபை தேர்தலின்போது தனது சக நடிகரும் நண்பருமான நடிகர் விஜய் கட்சிக்கு ஆதரவாக நடிகர் அஜித்குமார் கண்டிப்பாக பேசுவார், ஆதரவு தருவார் என்றும் பேச்சு கிளம்பியுள்ளது. ஏனெனில் நடிகர் அஜீத்குமாரை பொறுத்தவரை சினிமாவில் நடிப்பதில் காட்டிலும் கார் ரேஸ், பைக் ரேஸ்சில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். அதனால் நிச்சயமாக விஜய்க்கு அஜீத்குமார் அரசியல் ஆதரவு கொடுக்கும் பட்சத்தில் அது மிகப்பெரிய பலமாக விஜய் கட்சிக்கு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -

சற்று முன்