- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் மூன்றாம் பாகத்திற்கான சூட்டிங் தொடங்கப்போகிறதா... அதற்குப் பின்னணியில் இருப்பது இந்த ஸ்டாராமே... அப்படியா என்று...

இந்தியன் மூன்றாம் பாகத்திற்கான சூட்டிங் தொடங்கப்போகிறதா… அதற்குப் பின்னணியில் இருப்பது இந்த ஸ்டாராமே… அப்படியா என்று ஆச்சரியத்துடன் கேட்கும் ரசிகர்கள்…

- Advertisement -

கமல்ஹாசனுக்கு 2022 ஆம் ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதற்கு முந்தைய சில ஆண்டுகளில் கமல்ஹாசனுக்கு இரண்டு மூன்று வெற்றி திரைப்படங்கள் அமைந்தாலும், விக்ரம் திரைப்படம் அளவுக்கு எந்த ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி படமும் வரவில்லை. அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தை செதுக்கியிருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவான கல்கி படத்தில், முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் வந்தார் கமல்ஹாசன். இதே போல் இந்தியன் 2 திரைப்படமும் வெளியானது.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் சூட்டிங் கொரோனாவுக்கு முன்பே தொடங்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனை, இயக்குனர் சங்கருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே மோதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக, இந்தியன் 2 திரைப்படம் தொடர்வதில் சிக்கல் எழுந்தது.

பிறகு பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து, இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் கடந்த ஆண்டு வெளியானது. இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய காவியம். அதன் காட்சி அமைப்பும் கமல்ஹாசன் நடிப்பும் இசையையும் பற்றி இப்போது வரை ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இதன் காரணமாக அதன் தொடர்ச்சியான இந்தியன் 2 மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த சூழலில், அதனை அந்த திரைப்படம் பூர்த்தி செய்ய தவறிவிட்டது.

- Advertisement -

மிகவும் தொய்வான திரைக்கதை, சுமாரான வசனங்கள் என படம் முழுக்க ஒரு விறுவிறுப்பு இல்லாத கதைக்களத்தில் பயணித்ததால் அது ரசிகர்களிடம் கடைசி வரை ஒட்டவே இல்லை. அதை மீறி இந்த திரைப்படத்தை பலரும் வரம்பு மீறி கிண்டல் அடிக்க ஆரம்பித்தார்கள். இதனால் இந்தியன் 2 திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் சூட்டிங்கின் போதே மூன்றாம் பாகத்திற்கான பல காட்சிகளையும் சங்கர் எடுத்திருந்தார். ஆனால் இப்போதைக்கு அதன் மூன்றாம் பாகம் ரெடியாகாது என்று கூறி வந்தனர். இந்த சூழலில், இந்தியன் மூன்றாம் பாகத்தில் சில காட்சிகளை எடுக்க சங்கர் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதற்காக இருவரும் சம்பளம் வாங்காமல் பணியில் ஈடுபட இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்குப் பின்னணியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருந்ததாகவும் அவர் கூறியதாலேயே இது நடந்ததாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்