வாழ்க்கையில் மிக பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகள் படமாக்கப்படுவது போல, அதில் முக்கிய விஷயங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்பட வேண்டும். இதுகுறித்து ரஜினிகாந்த் ஒருமுறை பேசும்போது வெளிப்படையாக அவர் குறிப்பிட்டது இதுதான். வாழ்க்கை வரலாறு எழுதினால் அனைத்து உண்மைகளையும் எழுத வேண்டும். அது என்னால் முடியாது என்று கூறியிருந்தார்.
இப்போது இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இளையராஜா என்ற பெயர் வைத்த இந்த படத்தில், இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்கப் போகும் மற்ற நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. நடிகர், நடிகையர் தேர்வுக்கான ஆடிஷன் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இளையராஜா படத்தை பொருத்த வரை, இசைஞானியாக அவர் எந்தளவுக்கு பெயரும் புகழும் பெற்றவரோ, அதே அளவுக்கு சர்ச்சைகள், பிரச்னைகளும் இளையராஜாவுக்கு நிறையவே இருக்கின்றன. அதனால் அவரது படத்தில் அவரை சார்ந்த சர்ச்சையான விஷயங்களும் கொண்டு வரப்படுமா, என்ற கேள்வி எழுந்துள்ளது.
பயோபிக் என்றால், தனது வாழ்வில் நடந்த இன்ப துன்பங்கள், கஷ்ட நஷ்டங்கள், வெற்றி தோல்விகள், நம்பிக்கை துரோகங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள், உறவுகள், நட்புகள், தொழில் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, தனது பொருளாதார முன்னேற்றங்கள் என அனைத்து தரப்பு விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் கொண்டு வர வேண்டும். குறிப்பாக காதல் விஷயங்களையும் வெளிப்படுத்துவதே நியாயமாக, உண்மையாக இருக்கும்.
குறிப்பாக கடந்த 1970களில் இளையராஜா காதல் வயப்பட்டு இருக்கிறார். அப்போது காயத்ரி வீணா என்ற பெண் மீது இளையராஜா மீது காதல் வசப்பட்டு இருக்கிறார். தனது காதலை அந்த பெண்ணிடம் நேரடியாகவே அவர் சொல்லியும் இருக்கிறார். ஆனால் இளையராஜா காதலை ஏற்க மறுத்த காயத்ரி வீணா, வேறொருவரை திருமணம் செய்துக்கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார்.
இந்த காயத்ரி வீணா குறித்த மற்றொரு முக்கிய தகவலும் இருக்கிறது. இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி என்பதுதான் அது. இப்படி தன் காதலி, தன் காதலை ஏற்காமல் மறுத்துவிட்டு போன தனது அந்தரங்க விஷயத்தை, தனது வாழ்க்கை வரலாறு படத்தில் இளையராஜா இடம் பெறச் செய்வாரா அல்லது அதை இருட்டடிப்பு செய்து விடுவாரா என்ற கேள்விதான் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.





