- Advertisement -
Homeபொழுதுபோக்குதாயை காத்த தனையன் 100 வது நாள் வெற்றிவிழாவில் தரமான சம்பவம் செய்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர்...

தாயை காத்த தனையன் 100 வது நாள் வெற்றிவிழாவில் தரமான சம்பவம் செய்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் – என் அன்பு தெய்வம் என்று மனம் உருகிய பிரபல நடிகை!

- Advertisement -

புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் பல படங்களில் நடித்தவர் நடிகை சரோஜா தேவி. எம்ஜிஆர் டைரக்‌ஷனில் நாடோடி மன்னன் என்ற படத்தில்தான் சரோஜாே தேவி எம்ஜிஆருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அன்பே வா படகோட்டி எங்க வீட்டுப்பிள்ளை என 26 படங்களில் எம்ஜிஆருடன் நடித்திருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புதான் சரோஜா தேவி காலமானார்.

பல ஆண்டுகளுக்கு முன் விழா ஒன்றில் பங்கேற்றுப் பேசிய நடிகை சரோஜா தேவி கூறியதாவது, என்னுடைய அன்பு தெய்வம் எம்ஜிஆர் பற்றிய நிறைய விஷயங்கள் பலருக்கும் தெரியாது. உண்மையாக அவரை பற்றிய விஷயங்களை எழுதினால் ராமாயணம் மகாபாரதம் அளவுக்கு எழுதலாம். அந்தளவுக்கு நிறைய இருக்கிறது. முன்பெல்லாம் நடிகர் சங்கத்தில் பொருட்காட்சி போல நடத்துவார்கள்.

- Advertisement -

அங்கு ஜவுளிக்கடை நகைக்கடை எல்லாம் இருக்கும். ஒருமுறை நான் அங்கு போன போன அங்கு நகைக் கடையில் இருந்த ஒரு அழகான நெக்லஸ் பார்த்து ரொம்ப ஆசைப்பட்டு கேட்டேன். ஆனா சாவித்திரியம்மா ஆர்டர் பண்ணி அட்வான்ஸ் கொடுத்துட்டாங்க என்று கூறிவிட்டனர். அய்யோ எனக்கு ரொம்ப அது புடிச்சிருக்கு, அது வேண்டும் என்றேன்.

ஆனால் அவங்க அட்வான்ஸ் கொடுத்துட்டாங்க. அதனால் வேற இதே மாதிரி ஆர்டர் பண்ணி வேண்டுமானால் செஞ்சு தர்றோம் என்றனர். இல்லே, ஆர்டர் எல்லாம் வேண்டாம் எனக்கு பிடித்தால் அப்பவே வாங்கி போட்டுக்கணும் என்றேன். அவங்க இல்லேன்னு சொல்லிட்டாங்க. நானும் சரின்னு திரும்பி வந்துட்டேன்.

- Advertisement -

அப்புறம் தாயை காத்த தனையன் 100வது நாள் வெற்றி விழா நடந்தது. அப்போ மேடையில் நடிகர் அசோகனுக்கு மோதிரம் கொடுத்தாங்க. ஒருத்தருக்கு வாட்ச் கொடுத்தாங்க. நிறைய பேருக்கு பரிசு கொடுத்தாங்க. அப்போ இந்த மாதிரி விழாவில் பெரிய விலை உயர்ந்த பரிசு பொருட்களை கொடுப்பாங்க. இப்ப மாதிரி எல்லாம் அப்போ இல்லே. நான் மேடைக்கு போனப்போ பெரிய ஒரு வெல்வெட் பெட்டியில் எனக்கும் பரிசு கொடுத்தாங்க.

கீழே வந்து பெட்டியை திறந்து பார்த்தா, இப்போ நான் கழுத்துல போட்டிருக்கிற இந்த நெக்லஸ் அதில் இருந்தது. எப்படீன்னா நான் நெக்லஸ் கேட்டது அவங்க இல்லேன்னு சொன்னது எல்லாம் எனக்கு பின்னால வந்த எம்ஜிஆருக்கு தெரிஞ்சுருக்கு. நான் அப்படியே டல் ஆனதை பார்த்துட்டு அப்புறம் எம்ஜிஆர் ஆர்டர் கொடுத்து நெக்லஸை வாங்கி எனக்கு அந்த வெற்றிவிழாவில் எம்ஜிஆர் கொடுத்துட்டார். அவர்தான் என் அன்பு தெய்வம். அவர் இப்போ இல்லேன்னாலும் என்னோடு தான் இருக்கிறார் என்று நடிகை சரோஜா தேவி நெக்லஸை சுட்டிக் காட்டி அந்த விழாவில் பெருமையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்