- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படம் மீது எழுந்த விமர்சனங்கள், திடீர் முடிவு எடுத்த டைரக்டர் ஷங்கர் -...

இந்தியன் 2 படம் மீது எழுந்த விமர்சனங்கள், திடீர் முடிவு எடுத்த டைரக்டர் ஷங்கர் – இனிமேல் ரசிகர்கள் கொட்டாவி விட மாட்டாங்களா?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 படம், திரையரங்குகளில் 2 நாட்களாக ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்தின் டிரெய்லர் வெளியீடு முதலே இந்த படம் குறித்து, ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆர்வத்தை காண முடியவில்லை. அதற்கு கமல் மீதான அதிருப்தியாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இப்போது நடிகராக மட்டுமின்றி, கமல் அரசியல்வாதியாகவும் இருக்கிறார்.

இந்தியன் 2 படம் நேற்று ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், படம் பார்த்த கமல் ஆதரவாளர்கள் மட்டுமே படத்தை, ஆஹா ஓஹோ என புகழ்ந்து ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். ஆனால் பொதுவான ரசிகர்கள், இந்தியன் 2 படத்தை பார்த்துவிட்டு, இந்தியன் தாத்தா உண்மையிலேயே ரசிகர்களை தான் கதற விட்டிருக்கிறார் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

ஏனெனில் இந்த படம் கமல் படமா, ஷங்கர் படமா என்றே தீர்மானிக்க முடியாத அளவுக்கு கதை, திரைக்கதை எதுவுமே ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லை. படத்தில் எஸ்ஜே சூர்யா, ரகுல் ப்ரீத்தி சிங் உள்ளிட்டோர் படத்தில் எதற்கு இருக்கிறார்கள் என்றே ரசிகர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக அனிருத் இசை இந்த படத்தில் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்திருக்கிறது. பின்னணி இசை, பாடல்கள் எதுவுமே ரசிகர்களை கவரவில்லை.

இந்தியன் 2 படம் குறித்த பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் மிக முக்கியமான ரசிகர்களின் புகாராக இருப்பது, இந்த படத்தின் நீளம் 3 மணி நேரம் என்பதுதான். வழக்கமாக இன்றைய தமிழ் படங்கள் இரண்டே கால் மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம்தான் அதிகபட்சமாக இருக்கும். ஆனால், 180 நிமிடங்கள், 4 வினாடிகள் என படத்தின் நேரம் நீண்டிருப்பது ரசிகர்களை பெரிய அளவில் சோர்வடைய செய்கிறது.

அதிலும் குறிப்பாக கடைசியில் படத்தில் வரும் சேஸிங் காட்சி, 20 நிமிடங்கள் வரை நீடிக்கிறது. பல கோடிகள் செலவு செய்து 20 நாட்கள் எடுக்கப்பட்ட சேஸிங் காட்சி என்பதால், அந்த காட்சிகளை குறைக்க இயக்குனர் ஷங்கர் சம்மதிக்கவில்லை. அந்த காட்சிகள், பெரிய அளவில் ரசிகர்களையும் கவரவில்லை. படம் பார்க்க வந்த பலர், 3 மணி நேரம் படம் என்பதால் தூங்கியும் விடுகின்றனர்.

இதையடுத்து, இயக்குனர் ஷங்கர் அதிரடியாக ஒரு முடிவு எடுத்திருக்கிறார். அதாவது இந்தியன் 2 படத்தில், மொத்தமாக 20 நிமிடங்கள் காட்சியை குறைக்க முடிவு செய்திருக்கிறார். படத்தில் ரசிகர்களை வெறுப்படைய செய்யும் நீளமான காட்சிகள், தேவையற்ற காட்சிகளை நீக்கி விட சம்மதித்திருக்கிறார். அந்த வகையில் இனி 2 மணி நேரம் 40 நிமிடங்கள் மட்டுமே இந்தியன் 2 திரையில் ஓடும் என்ற ஒரு ரிலாக்ஸான தகவல் ரசிகர்களுக்கு வந்திருக்கிறது.

சற்று முன்