- Advertisement -
Homeபொழுதுபோக்குநள்ளிரவில் சம்பவம் செய்த தனுஷ் ரசிகர்கள்... 40ஆவது பிறந்தநாளில் ரசிகர்கள் கொடுத்த வியூஸ் கிபிட்

நள்ளிரவில் சம்பவம் செய்த தனுஷ் ரசிகர்கள்… 40ஆவது பிறந்தநாளில் ரசிகர்கள் கொடுத்த வியூஸ் கிபிட்

- Advertisement -

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர் தனுஷ். ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் தந்தை கஸ்தூரி ராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட தனுஷ், பின்னர் அண்ணன் செல்வராகவன் இயக்கிய ‘காதல் கொண்டேன்’ படத்தில் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். ஆரம்ப காலத்தில் தனுஷின் உருவத்தை வைத்து பலரும் அவரை கேலி செய்தாலும், சிறந்த கதைத் தேர்வுகள் மூலம் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை அவ்வபோது நிரூபித்தார். நடிப்பு தவிர்த்து பாடல் எழுதுவது, படம் இயக்குவது என சினிமாவில் பல துறைகளிலும் சிறந்து விளங்குகிறார். இத்தகைய திறமைகளைப் படைத்த தனுஷ் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

காதல், ஆக்ஷன், குடும்ப சப்ஜக்ட் என அனைத்துவிதமான ஜானரிலும் கலக்கும் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துவருகிறார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்தது. அடுத்து வந்த வாத்தி படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் ‘கேப்டன் மில்லர்’. அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கென், நிவேதிதா சதீஷ், கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ள கேப்டன் மில்லர் படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று நள்ளிரவு 12.01க்கு வெளியானது. டீசரில் தனுஷ் பயங்கரமான தோற்றத்தில் வெறித்தனமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். இந்த டீசர் வெளியான 45 நிமிடங்களில் 1 மில்லயன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்துள்ளது. தனுஷ் ரசிகர்கள் தமிழ்நாட்டின் ராக்கி பாஸ் தனுஷ் என சமூக வலைத்தளங்களில் கேப்டன் மில்லர் டீசரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்