- Advertisement -
Homeபொழுதுபோக்கு2 படங்களுக்கு கிடைத்த மோசமான தோல்வி, ஒரே இடத்தில் அசையாமல் நிற்கும் வேள்பாரி- அதிரடி முடிவுக்கு...

2 படங்களுக்கு கிடைத்த மோசமான தோல்வி, ஒரே இடத்தில் அசையாமல் நிற்கும் வேள்பாரி- அதிரடி முடிவுக்கு மாறிய இயக்குனர் ஷங்கர்!

- Advertisement -

இயக்குனர் வி சேகர் இயக்கிய விரலுக்கேத்த வீக்கம் படத்தில் ஒரு காட்சியில் தனது நண்பர்கள் லிவிங்ஸ்டன் மற்றும் வடிவேலுவிடம் நடிகர் விவேக் ஒரு டயலாக் பேசுவார். நம்ம காசு பணம் கொண்டு வந்து கொடுத்தா நம்ம பொண்டாட்டிங்க நம்மை தெய்வம்ன்னு சொல்லுவாங்க. அதுவே நம்மகிட்ட காசு பணம் இல்லைன்னு சொன்னா நாயை விட கேவலமா நம்மை நடத்துவாங்க என்று கூறுவார்.

இதுதான் பலரது குடும்ப வாழ்க்கையில் கணவன்களுக்கு உள்ள நிதர்சனமான உண்மை. இது குடும்பத்தில் மட்டுமல்ல, சினிமாத்துறையிலும் நடக்கும் கசப்பான ஒரு உண்மையாக உள்ளது. வெற்றிப் படங்களை கொடுக்கும் போது ஒரு இயக்குனரை, ஒரு ஹீரோவை கொண்டாடும் அந்த துறை 2 படங்கள் தோல்வி கொடுத்துவிட்டால் அந்த ஹீரோவை, அந்த இயக்குனரை மதிக்காமல் அலட்சியப்படுத்தி விடுகிறது.

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று கொண்டாடப்பட்டவர். கடந்த 30 ஆண்டுகளில் அவர் இயக்கிய 15 படங்களில் கடைசியாக வெளியான 2 படங்கள் மட்டுமே படுதோல்வி படங்கள் என்பது யாருமே மறுக்க முடியாத உண்மை தான். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 நடிகர் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் ஆகிய 2 படங்களும் படுதோல்வி அடைந்தன. பலத்த நஷ்டத்தை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்படுத்தியது.

அதனால் இயக்குனர் ஷங்கரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பில் நீடித்த தாமதம் மட்டுமின்றி பெரிய சுணக்கமும் ஏற்பட்டுள்ளது. அவரது அடுத்த படம் பற்றிய எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. சமீபகாலமாக தனது நீண்ட நாள் ஆசையான மதுரை எம்.பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை படமாக்கும் வேலைகளில் ஷங்கர் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார்.

- Advertisement -

ஆனால் தொடர் தோல்வி படங்களை தந்த இயக்குனர் ஷங்கரை நம்பி பெரிய பட்ஜெட் படம் எடுக்க பல நூறு கோடி ரூபாய் முதலீடு செய்ய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால் வேள்பாரி படம் அடுத்த கட்டத்துக்கு இதுவரை நகரவில்லை. ஏனெனில் வரலாற்று நாவலான இந்த படம் 3 பாகங்களாக உருவாகிறது. இந்த படத்தை தயாரிக்க ரூ. 1000 கோடிக்கு மேல் பட்ஜெட் தேவைப்படும்.

இந்த நிலையில் ஷங்கரை நம்பி 1000 கோடி ரூபாய் முதலீடு செய்வதில் தயாரிப்பாளர்களுக்கு அச்சம் நீடிக்கிறது. அதனால் வேள்பாரி படம் உருவாகுவதற்கு முன்பு குறுகிய காலகட்டத்தில் அதாவது சுமார் 70 நாட்களுக்குள் ஒரு சின்ன பட்ஜெட் படத்தை உருவாக்கி வெளியிடலாம் என்ற முடிவுக்கு ஷங்கர் வந்திருக்கிறார். இப்போது அதற்கான முயற்சிகளை ஷங்கர் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் மாஸ் ஹிட் ஆகிவிட்டால் வேள்பாரி படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் நம்பிக்கையுடன் முன்வர அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்