- Advertisement -
Homeபொழுதுபோக்குவேள்பாரி படத்தை இயக்குவதற்காக களத்தில் இறங்கிய இயக்குனர் சங்கர்... மூன்று ஹீரோக்களிடம் கதை கூறிவிட்டாரா... அதில்...

வேள்பாரி படத்தை இயக்குவதற்காக களத்தில் இறங்கிய இயக்குனர் சங்கர்… மூன்று ஹீரோக்களிடம் கதை கூறிவிட்டாரா… அதில் சூர்யா இல்லையா…

- Advertisement -

இயக்குனர் சங்கருக்கு இது போதாத காலம் என்று தான் கூற வேண்டும். ஒரு காலத்தில், முதல்வன் இந்தியன் சிவாஜி எந்திரன் என மாஸ் படங்களை கொடுத்து இந்திய சினிமாவையே பிரம்மிப்பில் ஆழ்த்திய இயக்குனர் சங்கர் தற்போது ஒரு வெற்றியைக் கூட கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

 

- Advertisement -

அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான ஐ இந்தியன் 2 கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தன. குறிப்பாக இந்தியன் 2 திரைப்படம் ஒட்டுமொத்த ஷங்கரின் திரை உலக பயணத்தையும் கேள்விக்குறியாக்கும் வகையில் அவரை கீழே இறக்கி சென்றது. சொல்லப்போனால் அந்த திரைப்படம் இணையத்தில் ட்ரோல் மெட்டீரியலாகவும் மாறியது.

 

- Advertisement -

மிகவும் தொய்வான திரைக்கதை, அழுத்தம் இல்லாத காட்சிகள், கூர்மை இல்லாத வசனங்கள் என எதுவுமே இந்தியன் 2 திரைப்படத்தில் சரியாக இல்லை என ரசிகர்கள் தெரிவித்தனர். திரையரங்குகள் மட்டும் இன்றி ஓடிடி தளத்திலும் இந்த திரைப்படம் கவனிக்க தவறியது. இதனால் சங்கர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார்.

 

இந்த சூழலில் தற்போது அவர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. தெலுங்கில் நேரடியாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் ராம்சரண் நடித்திருக்கிறார். ஆனால் இந்த திரைப்படமும் பெரிய அளவில் விமர்சனத்தை பெறவில்லை. சங்கருக்கு என்னதான் ஆயிற்று என்று பலரும் அவர் குறித்த விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் கேம் சேஞ்சர் பெரியளவு தாக்குப் பிடிக்கவில்லை. இதனால் தயாரிப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில் இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தை திரைக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் சங்கர். அதுமட்டுமல்லாமல் சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலையும் அவர் இயக்கத் திட்டமிட்டுள்ளார்.

 

இதுகுறித்து பல்வேறு பேட்டியிலும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் வேள்பாரிக்கான கதையை, கன்னட நடிகர் யஷ்ஷிடம் அவர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபோக நடிகர்கள் அர்ஜுன் மற்றும் ரவி மோகன் ஆகியோரிடமும் வேள்பாரி கதையை அவர் தெரிவித்திருக்கிறார். மற்றும் ஒரு முன்னணி தமிழ் நடிகரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். வேள்பாரி படத்தில் சூர்யா நடிப்பதாக கூறப்பட்டிருந்த சூழலில் தற்போது வெளியாகி இருக்கிற இந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.

 

- Advertisement -

சற்று முன்