- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 2 படத்தில் நடிகர் கமல் விருப்பத்தை அலட்சியப்படுத்திய இயக்குனர் ஷங்கர், அவர் போட்ட கணக்கு...

இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல் விருப்பத்தை அலட்சியப்படுத்திய இயக்குனர் ஷங்கர், அவர் போட்ட கணக்கு சரியா வருமா? – உண்மையை சொன்ன பிரபலம்

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வருகிற ஜூலை 12ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று முன்தினம் சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில், மிகவும் பிரமாண்டமாக நடந்தது.

இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் ஷங்கர், நடிகை காஜல் அகர்வால், நடிகர் சிம்பு, இயக்குனர்கள் நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ், நடிகை அதிதி ஷங்கர், இசையமைப்பாளர் அனிருத், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர். இந்த விழாவில் பேசிய கமல், முதன் முறையாக தனது மகளின் திருமணம் குறித்து மேடையில் தன் ஆசையை தெரிவித்தது, குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த 28 ஆண்டுகளுக்கு முன், 1996ம் ஆண்டில் வெளிவந்த இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக தான் இந்தியன் 2 படமும், இந்த படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 3 படம், அடுத்த ஆண்டு பொங்கலுக்கும் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. ஆனால் இந்தியன் படத்துக்கு இசையமைத்த ஏஆர் ரகுமான், ஏன் இந்தியன் 2 படத்துக்கு இசையமைக்கவில்லை, என்பதற்கான காரணம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதுகுறித்து சில ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி எழுந்த நிலையில், இதற்கு ஒரு நேர்காணலில் பதில் அளித்த இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான், இந்தியன் 2 படத்துக்கு நீங்கள்தான் இசையமைக்க வேண்டும் என்று கமல், என்னிடம் அடிக்கடி வற்புறுத்திக் கொண்டே இருந்தார், ஆனால் டைரக்டர் ஷங்கர் இதுகுறித்து என்னிடம் பேசவே இல்லை. அந்நியன், நண்பன் படங்களில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூடன் ஷங்கர் பணிசெய்திருந்தார்.

- Advertisement -

இயக்குனர் ஷங்கருக்கு ஒரே இசையமைப்பாளருடன் பணிசெய்வது போர் அடித்திருக்கலாம். அதனால், ஒரு மாற்றத்தை விரும்பி கதை ரீதியாக அவர் என்னை இந்த படத்துக்கு அழைக்கவில்லை என்று நினைக்கிறேன் என்று ஏஆர் ரகுமான் கூறியிருக்கிறார். இந்தியன் 2 படத்துக்கு அனிரூத் இசையமைத்துள்ள நிலையில், ஏஆர் ரகுமானின் இந்த பேட்டி இப்போது வைரலாகி வருகிறது.

கடந்த 1996ம் ஆண்டில் வெளிவந்த இந்தியன் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர்ஹிட் பாடல்களாக அமைந்தன. அதனால் இந்தியன் 2 படத்திலும், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் பணி செய்யட்டும் என நடிகர் கமல் விரும்பிய நிலையில், அதை அலட்சியப்படுத்தி விட்டு அனிருத்தை டைரக்டர் ஷங்கர் இசையமைக்க வைத்திருப்பது இதன் மூலம் உறுதியாகிறது. இந்தியன் 2 வெளிவந்தால்தான், அனிருத் பாடல்கள் ஹிட் ஆகிறதா, ஷங்கர் போட்ட கணக்கு சரிதானா என்ற கேள்விகளுக்க விடை தானாக தெரிந்து விடும்.

- Advertisement -

சற்று முன்