தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் நடிகர் விஜய். இப்போது தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராகவும் தமிழக முதல்வராகவும் வலம் வருகிறார். ஆனால் விஜய் எப்போதும் பொதுவெளிகளிலும் நிஜ வாழ்க்கையிலும் மிகவும் அமைதியாகவும் குறைவாக பேசும் குணத்தோடும் இருக்கிறார். இதற்கான காரணத்தை அவரது தாய் ஷோபா சந்திரசேகர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசும்போது வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
அந்த நேர்காணலில் பேசிய தமிழக முதல்வர் விஜயின் அம்மா ஷோபா சந்திரசேகர் தங்களது ஆரம்பகால வறுமையான வாழ்க்கை, குடும்ப பின்னணி குறித்து வெளிப்படையாக பல விஷயங்களை பேசியிருக்கிறார். விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் உதவி இயக்குனராக இருந்தபோது அவருக்கு சம்பளம் எதுவும் வழங்கப்படவில்லை. சாப்பாடு போக்குவரத்து செலவுக்கு மட்டுமே பணம் கொடுக்கப்பட்டது.
முழுநேர சினிமாவுக்காக எஸ்ஏ சந்திரசேகர் தனது அரசு வேலையையும் கைவிட்டு விட்டார். பின்னணி பாடகியான ஷோபாவின் இசை கச்சேரி வருமானத்தை வைத்துதான் குடும்பம் நகர்ந்துள்ளது. உதவி இயக்குனராக இருந்த போது எஸ்ஏ சந்திரசேகருக்கு வருமானம் இல்லை என்றாலும் இசை கச்சேரிகளில் பங்கேற்று ஷோபா ஓரளவுக்கு வருமானம் ஈட்டியிருக்கிறார். அதன்மூலமே குடும்பம் நடந்திருக்கிறது.
அதனால் நடுத்தர குடும்பத்தில் வளர்ந்த விஜயை ஒரு டாக்டராக்கி பார்க்க வேண்டும் என்பதே அவரது பெற்றோரின் ஆசையாக இருந்தது. ஆனால் விஜய் தனது 18 வயது வரை பைலட் அதாவது விமானி ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் அவருக்கு வந்தது. அதன்பின்னர் சினிமாவுக்குள் விஜய் நுழைந்தார்.
ஆரம்ப காலத்தில் சின்ன வயது பையனாக இருக்கும் போது மிகவும் துடிப்பாகவும் சுட்டித்த்தனமாகவும் விஜய் இருந்திருக்கிறார். அந்த சிறுவயதுக்கு உரிய எல்லாவித குறும்புகளும் அவரிடம் இருந்துள்ளது. ஆனால் அவரது அன்பு தங்கை வித்யா 2 வயதில் இறந்த பிறகு முற்றிலும் தனிமை விரும்பியாக விஜய் மாறிப் போயிருக்கிறார். தங்கையின் மறைவு அந்த அளவுக்கு அவருக்குள் ஒரு பலத்த சோகத்தை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சோகத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்றால் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றால் கூட மற்றவர்களை ஷாப்பிங் செய்ய அனுப்பி விட்டு விஜய் மற்றும் தனது அறையிலேயே தனிமையில் நேரத்தை கழிப்பார் என்று அவரது தாய் ஷோபா சந்திரசேகர் உருக்கமாக அந்த தகவலை பகிர்ந்திருக்கிறார். தங்கையின் நினைவாகவே விஜய் தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு வித்யா விஜய் புரொடக்சன்ஸ் என்று பெயர் சூட்டி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





