மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் ஜெயராம். அதே நேரத்தில் தமிழில் ஏராளமான படங்களில் அவர் நடித்திருக்கிறார். கோகுலம் பிரியங்கா பஞ்சதந்திரம் முறைமாமன் தெனாலி துப்பாக்கி உத்தம வில்லன் பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 மற்றும் சமீபத்தில் வெளியான பரிமளா அண்ட் கோ உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
நடிகர் ஜெயராம் எந்தவிதமான கேரக்டர் என்றாலும் அதில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி விடுவார். காமெடி காதல் சென்டிமென்ட் என எது மாதிரியான காட்சிகளிலும் அவர் தனித்துவமான இயல்பான நடிப்பை தந்து விடுகிறார். நடிகர் கமல்ஹாசன் படங்களில் ஜெயராம் இதுவரை அதிகமாக நடித்துள்ளார்.
இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் முத்து. இந்த படம் கடந்த 1995ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் மீனா சரத்பாபு ரகுவரன் பாரதி செந்தில் வடிவேலு பொன்னம்பலம் காந்திமதி குமரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏஆர் ரகுமான் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் ஆனது.
முத்து படத்தில் ஜமீன்தார் கேரக்டரில் நடிகர் சரத்பாபு நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் கதைப்படி ரஜினியை அடித்து வீட்டை விட்டு விரட்டுவது போல ஒரு காட்சி வரும். உண்மையில் ஜமீன்தார் மகன் ரஜினிகாந்த், அந்த வீட்டில் வேலைக்காரனாக இருப்பது பின்னர் பிளாஸ்பேக் கதையில் ரசிகர்களுக்கு தெரிய வரும். இதில் ஜமீன்தாரர் கேரக்டரில் சரத்பாபு நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் ஜெயராம் முத்து படம் குறித்து பேசியிருக்கிறார். அந்த நேர்காணலில் ஜெயராம் இதுபற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார். முத்து படத்தில் நடிகர் சரத்பாபு நடித்த ஜமீன்தார் கேரக்டரில் முதலில் நடிக்க கமிட் ஆனவர் நடிகர் ஜெயராம்தான். ஆனால் அந்த ஒரு காட்சியில் ரஜினியை ஓங்கி அறைய வேண்டும் என்று இருந்ததால் அந்த காட்சியில் நடிக்க விரும்பாமல், அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லி அந்த வாய்ப்பை அவர் நிராகரித்திருக்கிறார்.
அதற்கு பிறகு தான் அந்த படத்தில் சரத்பாபு ஜமீன்தார் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்கிற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் முத்து படத்தில் சரத்பாபுவுக்கு பதிலாக வில்லன் ராதாரவியின் அடியாள் பொன்னம்பலம் தான் ரஜினியை அடித்து விரட்டுவது போல காட்சி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.





