- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங்கில் டைரக்டரும், ஹீரோவும் செய்த அத்துமீறலால் ஏகப்பட்ட டென்சன் - ஒருவேளை பழைய காதல் வாழ்க்கை...

ஷூட்டிங்கில் டைரக்டரும், ஹீரோவும் செய்த அத்துமீறலால் ஏகப்பட்ட டென்சன் – ஒருவேளை பழைய காதல் வாழ்க்கை அவருக்கு மெமரியில் வந்துடுச்சோ?

- Advertisement -

சினிமா ஷூட்டிங் என்பது, கலைத்துறை சார்ந்தவர்களுக்கு ஒரு தொழில்,.அவர்களது வாழ்வாதாரம். ஆனால், சராசரி மனிதர்களுக்கு அது ஒரு பொழுதுபோக்கு. நல்ல படங்களாக இருந்தால், ரசித்து நல்ல வரவேற்பு கொடுப்பார்கள். பெரிய வெற்றியை, புகழை அந்த படத்துக்கு தேடித் தருவார்கள். அப்படித்தான் ஒவ்வொரு நல்ல படங்களும் ஜெயிக்கின்றன.

செல்வராகவன் இயக்கத்தில், 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் 7 ஜி ரெயின்போ காலனி. தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் மகன் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடித்த இந்த படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. பாடல்களும் டிரண்டிங் ஆகின. 7ஜி ரெயின்போ காலனியில் வாழும் ஒரு இளைஞனின் காதல் கதை என்பதால், படத்துக்கே அந்த டைட்டில்தான் செல்வராகவன் வைத்திருந்தார்.

இந்த படம் எடுத்த காலகட்டத்தில்தான், இயக்குநர் செல்வராகவனுக்கும், சோனியா அகர்வாலுக்கும் காதல் ஏற்பட்டு, சில ஆண்டுகளுக்கு பின் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். செல்வராகவன் மீண்டும் திருமணம் செய்துகொண்டார். இந்த பிரிவுக்கு பிறகு, சோனியா அகர்வால் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இப்போது இயக்குநர் செல்வராகவன், ரவிகிருஷ்ணாவை ஹீரோவாக வைத்து, 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். செம்மணஞ்சேரியில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் ஷூட்டிங் நடந்திருக்கிறது. இதில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் இன்னும் முழுமையாக தெரியவில்லை.

இதற்கிடையே ஷூட்டிங் ஸ்பாட்டில், நடந்த விஷயங்கள் தெரிய வந்திருக்கிறது. அதாவது, அந்த அபார்ட்மென்ட் அசோசியேசனில் ஷூட்டிங் நடத்த பர்மிசன் வாங்கிய செல்வராகவன் உள்ளிட்ட படக்குழுவினர், அங்கு வாழும் குடியிருப்புவாசிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அங்குள்ள 2வது ப்ளோரில் இரவும் பகலும் ஷூட்டிங் நடத்தி ஒருவித இடையூறுகளை ஏற்படுத்தி இருக்கின்றனர்.

செயின் ஸ்மோக்கர் செல்வராகவன் என்பதால், எந்நேரமும் சிகரெட்டை புகைத்து தள்ளி இருக்கிறார். படத்தின் முதல் பாகத்தில் சோனியா அகர்வால் நாயகியாக நடித்திருந்தால், அந்த காதல் நினைவுகளால் இன்னும் அதிக சிகரெட்டுகளை ஊதியிருக்கிறார். ஹீரோ ரவிகிருஷ்ணாவும், புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால், இருவரும் ஊதி தள்ளி, புகைமண்டலத்தை எழுப்பியுள்ளர். தவிர, கிரேன் கேமராக்களை நகர்த்தி, உயர்த்தி அங்கிருந்த பக்கவாட்டு சுவர்களை, பக்கத்து வீட்டு ஜன்னல்களை எல்லாம் உடைத்து ஏகப்பட்ட பிரச்னைகளை செய்திருக்கின்றனர். இந்த களேபரங்களால் அங்குள்ள குடியிருப்பு வாசிகள் நொந்து போய்விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.

சற்று முன்