- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா 44 படத்தில் ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ரஜினி பட நாயகி, அவரே சொன்ன...

சூர்யா 44 படத்தில் ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட ரஜினி பட நாயகி, அவரே சொன்ன தகவல் – அப்போ தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி தர தயாராகிட்டாங்களா?

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது திரைக்கு வரும் ஓடிக்கொண்டிருக்கும் படம் கங்குவா. எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேசன்ஸ் தயாரித்த இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படம் எதிர்பார்த்த வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை.

ஆனால் இந்த படத்தில் நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கடுமையாக உழைத்துள்ளனர். குறிப்பாக கதாநாயகன் சூர்யா இந்த படத்துக்காக மிகவும் சிரமப்பட்டு, பல காட்சிகளில் சிரத்தை எடுத்து நடித்து தனது 100 சதவீத உழைப்பை தந்துள்ளார். ஆனால் கதை, திரைக்கதையில் இயக்குனர் சிறுத்தை சிவா கோட்டை விட்டதால் படம் ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

- Advertisement -

அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 44வது படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர். இப்போதும் தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். சூர்யா 44 படம் குறித்து பூஜா ஹெக்டே கூறுகையில் இது ஒரு காதல் படம் என்று கூறியிருக்கிறார்.

இந்நிலையில் சூர்யா 44 படத்தில் நடிகை ஸ்ரேயா ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஷங்கர் இயுக்கிய சிவாஜி படத்தில் நடிகர் ரஜினிக்கு ஸ்ரேயா ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அழகிய தமிழ் மகன், குட்டி, கந்தசாமி, ரௌத்திரம் பழகு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். கடைசியாக அன்பானவன், அசராதவன், அடங்காதவன் படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார்.

- Advertisement -

அதன்பிறகு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஸ்ரேயா செட்டிலாகி விட்டார். இப்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்ரேயா சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதற்கு ரீ என்ட்ரி தரும் விதமாக சூர்யா 44 படத்தில் ஒரு ஐட்டம் பாட்டுக்கு நடனமாடி இருக்கிறார்.

இதுகுறித்து நடிகை ஸ்ரேயா கூறுகையில், சூர்யா 44 படத்தில் ஒரு பாடலுக்கு நான் நடனமாடி உள்ளேன். அந்த பாடல் மிகவும் சிறப்பாக, அருமையாக வந்துள்ளது, என்று அவரே கூறி உறுதி செய்திருக்கிறார். சூர்யாவுடன் நாயகியாக ஸ்ரேயா நடிக்காத நிலையில், இந்த படத்தில்தான் முதல் தடவையாக அவருடன் ஸ்ரேயா நடனமாடி இருக்கிறார். ஊ சொல்றியா மாமா போன்று இந்த பாடலும் வைரலாகுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்